புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் படுகொலை சம்பவத்தின் பின்னணி: அடுத்தடுத்து கொலைகள்; கைகட்டி நிற்கும் காரைக்கால் போலீஸ்

புதுச்சேரி மாநில முன்னாள் சபாநாயகர் வி.எம்.சி.சிவக்குமார் கொலை செய்யப்பட்டுள்ளதன் பின்னணியில் பழிக்குப் பழி நடவடிக்கை இருப்பதாகக் கூறப்படும் நிலையில் தொழிலதிபர் ராமுவின் 2-வது மனைவி எழிலரசியின் கைவண்ணம் இதில் இருப்பதாக போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.

காரைக்கால் மற்றும் தமிழகப் பகுதிகளில் சாராயத் தொழிலில் கொடிகட்டிப் பறந்தவர்கள் திரு மலைராயன்பட்டினத்தைச் சேர்ந்த சகோதரர்கள் ஆனந்தன், ராமு. இவர்கள் இருவருமே அப் பகுதி அரசியல் பிரபலமான வி.எம்.சி.சிவக்குமாரின் ஆதரவா ளர்களாக இருந்தனர். 2006-ல் திமுக சார்பில் நிரவி- திருப்பட்டினம் சட்டப் பேரவைத் தொகுதியில் சிவக்குமார் போட்டியிட்டபோது ஆனந்தனும் அவரது சகோதரர் ராமுவும் அவருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர்.

பின்னர் சகோதரர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இரு வரும் பிரிந்த நிலையில், ஆனந்த னுக்கு ஆதரவாக சிவக்குமார் செயல்பட்டுள்ளார். ஆனால், 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட சிவ குமாருக்கு வாய்ப்பு அளிக்காமல் அவரது ஆதரவாளரான ஆனந் தனின் மனைவி கீதாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

இதனால், திமுகவிலிருந்து விலகிய சிவக்குமார் அத்தொகுதி யில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது சிவக்குமாருக்கு ஆதரவாக ராமு செயல்பட்டார்.

ஆளும் கட்சியான என்.ஆர்.காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்ததன் மூலம் காரைக்கால் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர், புதுச்சேரி சாராய வடிசாலை தலைவர் ஆகிய பதவி களை சிவகுமார் பெற்றார். இதனிடையே ராமுவுக்கும் அவரது மனைவி வினோதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்த சூழலில், போலகத்தைச் சேர்ந்த எழிலரசியை ராமு 2-வது திருமணம் செய்துகொண்டார். சில குடும்ப நிகழ்வுகள் காரணமாக ராமுவுக்கும், சிவக்குமாருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.

இந்நிலையில், ராமு தரப்பினரால் தன் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக போலீஸில் சிவக்குமார் புகார் அளித்திருந்தார். இதையடுத்து, அவருக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், 2013-ம் ஆண்டு ஜனவரி 11-ம் தேதி காரைக்கால் நீதிமன்றத்துக்கு வந்த ராமுவையும் அவரது 2-வது மனைவியையும் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வழிமறித்து வெட்டியதில் ராமு அந்த இடத்திலேயே உயிரிழந்தார். எழிலரசி பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார்.

ராமு கொலையின் பின்னணி யில் வினோதா சம்பந்தப்பட்டிருக் கிறார் என்றும், அவருக்கு வி.எம்.சி.சிவகுமார் ஆதரவளித் திருக்கலாம் என்ற சந்தேகமும் எழிலரசி தரப்பினருக்கு இருந்து வந்தது. இந்தச் சூழலில் ராமு கொலைக்கு பழிவாங்கும் நட வடிக்கையாக அந்த வழக்கில் கைதான நபர்களில் ஒருவரான டிராவல்ஸ் உரிமையாளர் ஐயப்பன் என்பவர் 2013-ம் ஆண்டு ஜூலை 10-ம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதில்தான் எழிலரசி முதன்முதலாக போலீஸா ரால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவர் ஜாமீனில் வந்த நிலையில் 2015-ம் ஆண்டு ஏப்ரல் 27-ம் தேதி சீர்காழி புறவழிச் சாலை யில் ராமுவின் முதல் மனைவி வினோதா, வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதற்குக் காரண மாக இருந்ததற்காக 2-வது முறை யாக எழிலரசி கைது செய்யப் பட்டார். பின்னர், ஜாமீனில் வெளிவந்த எழிலரசி கடந்த சில மாதங்களுக்கு முன் சிவக்குமாரை தொலைபேசியில் தொடர்புகொண்டு மிரட்டினாராம். இந்நிலையில்தான், நிரவியில் நடைபெற்று வரும் தனது திருமண மண்டப கட்டுமானப் பணிகளைப் பார்வையிடச் சென்ற சிவக்குமார் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

பட்டியலில் இன்னும் பலர்?

தன் கணவரின் கொலைக்குக் காரணமானவர்கள் என கருதப்படுபவர்களை எழிலரசிதான் கூலிப்படை மூலம் கொலை செய்கிறார் என்றும், அவரது பட்டியலில் இன்னும் சிலரும் மீதம் இருப்பதாகவும் போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. மேலும், தமிழரசியின் உயிருக்கு எந்நேரமும் ஆபத்து ஏற்படலாம் என்றும் காரைக்கால் மாவட்ட மக்கள் அதிர்ச்சியுடன் கூறுகின்றனர்.

டிஜிபி ஆய்வு

கொலை நடந்த திருமண மண்டபத்தில் நேற்று மாலை புதுச்சேரி டிஜிபி சுனில் குமார் கவுதம் ஆய்வு செய்தார். அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கொலை சம்பவம் குறித்து சில துப்புகள் கிடைத்துள்ளது’’ என்றார்.

கொலை வழக்கில், குற்றவாளி களைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப் பாளர் வி.ஜே.சந்திரன் தெரிவித்தார். கொலை செய்யப்பட்ட சிவக் குமாரின் பாதுகாவலரிடம் இருந்து பறித்துச் செல்லப்பட்ட 20 தோட்டாக்கள் நிரப்பப்பட்ட கார்பன் ரக துப்பாக்கியைக் கண்டறியும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தேசிய அளவில் தகவல் கொடுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

5 hours ago

வலைஞர் பக்கம்

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

7 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்