தமிழக அரசின் சுற்றுச்சூழல் தகவல் மையத்துக்கு விருது

By செய்திப்பிரிவு

தமிழக அரசின் சுற்றுச்சூழல் தகவல் மையத்துக்கு நாட்டின் மிகச் சிறந்த சுற்றுச்சூழல் தகவல் மையம் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''நாட்டில் 69 சுற்றுச்சூழல் தகவல் மையங்கள் பல்வேறு பகுதிகளில் இயங்கி வருகின்றன. தமிழக அரசின் சுற்றுச்சூழல் இயக்குநரகத்தின் கீழ் செயல்படும் சுற்றுச்சூழல் தகவல் மையம் சுற்றுச்சூழல் தொடர்புடைய பல்வேறு தகவல்களை www.tnenvis.nic.in என்ற வலைதளம் மூலம் வழங்கி வருகிறது. இந்த தகவல் மையத்துக்கு 2015-16-ம் ஆண்டுக்கான நாட்டின் மிகச் சிறந்த சுற்றுச்சூழல் தகவல் மையம் என்ற விருது வழங்கப்பட்டது.

அதோடு மையத்தினை மேம்பாடு செய்ய ரூ.1 லட்சத்தையும் மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் குஜராத்தில் நடைபெற்ற தேசிய மதிப்பீடு கருத்துப்பட்டரையின்போது வழங்கியது. இந்த விருதினை தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தலைமைச்செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் வியாழக்கிழமை காண்பித்து வாழ்த்துபெற்றார். அப்போது தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

சினிமா

24 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

43 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்