வேட்பாளர் அறிவிப்பில் அதிருப்தி காங்கிரஸ் அலுவலகத்துக்கு தீ வைப்பு?

By செய்திப்பிரிவு

கடலூரில் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் திடீரென தீ விபத்து நிகழ்ந்தது. வேட்பாளர் அறிவிப்பின் எதிரொலியாக அதிருப்தியாளர்கள் யாரேனும் தீ வைத்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

தமிழகத்தில் 30 தொகுதிக ளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியலை தமிழக காங்கிரஸ் தலைவர் பி.ஞானதேசிகன் அறிவித்தார். அதில் கடலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக கே.எஸ்.அழகிரி மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

காலை அலுவலகம் வந்த நிர்வாகி பக்தவச்சலம் புகை வருவதைக் கண்டு காங்கிரஸ் மாவட்டத் தலைவர் எம்.ஆர்.ராதாகிருஷ்ணனுக்கு தகவல் அளித்தார்.

இந்த விபத்தில் அலுவலகத் தில் இருந்த வாக்காளர் பட்டி யல், உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்பங்கள், அடையாள அட்டைகள், கட்சிக் கொடி மற்றும் தோரணங்கள் எரிந்து நாசமானது. தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கேட்டு சீட் கிடைக்காத அதிருப்தி யில் யாரேனும் செய்திருக்கக் கூடும் என ராதாகிருஷ்ணன் தெரி வித்தார். இச்சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் எதுவும் அளிக்கபடவில்லை. இரு சக்கர வாகனங்களை துடைக்கப் பயன்படுத்தப்படும் துணிகளைப் பயன்படுத்தி, தீ வைத்திருப்பது தெரிய வந்துள்ளது.

ஆனால் விபத்து குறித்து கருத்து தெரிவித்த கடலூர் எம்பி கே.எஸ்.அழகிரி இந்த விபத்து மின் கசிவால் ஏற்பட்டிருக்கலாம் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 mins ago

இந்தியா

40 mins ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

6 hours ago

வலைஞர் பக்கம்

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்