களைகட்டியது தீபாவளி கொண்டாட்டம்: பேருந்து, ரயில்களில் அலைமோதிய கூட்டம் - ஆம்னி பேருந்துகளுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

சொந்த ஊரில் தீபாவளி கொண்டாடு வதற்காக சென்னையில் இருந்து ஏராளமானோர் நேற்று புறப்பட்டுச் சென்றதால் பேருந்து, ரயில்களில் கூட்டம் அலைமோதியது. சென்னை யில் கோயம்பேடு, பூந்தமல்லி, தாம்பரம் சானடோரியம், அண்ணா நகர் என 4 இடங்களில் இருந்து பேருந்துகள் பிரித்து அனுப்பப்பட்ட தால், போக்குவரத்து நெரிசல் வெகு வாகக் குறைந்தது. ஆம்னி பேருந்து களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

தீபாவளிப் பண்டிகை நாளை (29-ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஓரிரு நாளாகவே சென்னையில் இருந்து ஏராளமானோர் தங்கள் சொந்த ஊருக்குச் சென்ற வண்ணம் உள்ளனர். கோயம்பேடு பேருந்து நிலையம், எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் வழக்கத்தைவிட நேற்றும் அதிகமாக இருந்தது. தென் மாவட்டங் களுக்கு இயக்கப்படும் வழக்கமான விரைவு ரயில்களில் முன்பதிவு இல் லாத பொதுப் பெட்டிகளில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

வெளியூர் செல்பவர்களின் வசதிக் காக கோயம்பேடு தவிர பூந்தமல்லி, சானடோரியம், அண்ணாநகர் மேற்கு, கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரே அமைக்கப்பட்டுள்ள மாநில தேர்தல் ஆணையம் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. மக்கள் கூட்டம் வர வர, அரசு சிறப்பு பேருந்துகள் வரவழைக்கப்பட்டு வரிசையாக இயக்கப்பட்டன. அரசு சிறப்பு பேருந்துகளில் பயணம் செய்ய நேற்று மாலை வரை 1 லட்சத்து 64 ஆயிரத்து 247 பேர் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர். இதேபோல, கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றனர்.

2,000 சிறப்பு பேருந்துகள்

சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து போக்கு வரத்துக் கழக உயர் அதிகாரிகள் கூறியதாவது:

தீபாவளி பண்டி கையின்போது, பொதுமக்கள் சிரம மின்றி பயணம் செய்யும் வகையில் கோயம்பேடு உட்பட 5 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகளை இயக்குகிறோம். பயணிகள் கூட்டம் 27-ம் தேதி (நேற்று) மாலை முதல் அதிக ளவில் இருந்தது. சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,275 பேருந்துகளை தவிர, 4 தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்தும் சுமார் 2,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. 28-ம் தேதி (இன்று) மக்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்பதால், 4 தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்தும் வழக்கமான பேருந்துகள் உட்பட மொத்தமாக 4,775 பேருந்துகள் இயக்கப்படும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

ஆம்னி பேருந்துகள் கடந்த ஆண்டு வசூலித்த கட்டணத்தையே தற்போதும் வசூலிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள் ளது. இந்த உத்தரவைப் பின்பற்றி ஆம்னி பேருந்துகளைக் கண்காணிக்கு மாறு மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு தமிழக போக்குவரத்து துறை அறிவுறுத் தியுள்ளது. ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளிடம் அந்த கூடுதல் தொகையை திரும்பப் பெற்று பயணிகளிடம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் அரசு தெரிவித்துள்ளது.

தொடர் விடுமுறை, பண்டிகை நாட்களில் சிறப்பு பேருந்துகள் கோயம் பேட்டில் இருந்து இயக்கப்பட்டு வந்தன. இதனால் கடுமையான போக்கு வரத்து நெரிசல் ஏற்படும். தற்போது 4 இடங்களில் இருந்து வெளியூர் பேருந்துகள் பிரித்து இயக்கப்படுவ தால், போக்குவரத்து நெரிசல் குறைந் துள்ளது. இதனால், பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

32 mins ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

6 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

10 hours ago

வலைஞர் பக்கம்

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

11 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்