பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 1.50 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள்: இந்தியன் ஆயில் நிறுவனம் தகவல்

By செய்திப்பிரிவு

வறுமைக்கோட்டுக்கு கீழே வசிக்கும் மக்களுக்கு எரிவாயு இணைப்புகளை வழங்கும் பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ், நாடுமுழுவதும் ஒரு கோடியே 50 லட்சம் எரிவாயு இணைப்புகள் வழங்கப் பட்டுள்ளன.

வறுமைக்கோட்டுக்கு கீழே வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளில் எரிவாயு இணைப்பை பயன்படுத்தும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி, உஜ்வாலா யோஜனா என்ற திட்டத்தை கடந்த மே மாதம் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் குடும்பத்தின் பெண் உறுப்பினர் கண்டறியப்பட்டு அவருக்கு டெபாசிட் தொகை இல்லாத சமையல் எரிவாயு இணைப்பும், அரசின் நிதி யுதவியாக இணைப்பு ஒன்றுக்கு ரூபாய் ஆயிரத்து 600-ம் வழங்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டில் ஒன்றரை கோடி இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி, கடந்த எட்டு மாதங்களில் இந்த இலக்கு எட்டப்பட்டுள்ளது.

இதில், அதிகபட்ச இணைப் புகள் கொண்ட ஐந்து மாநிலங்களாக உத்தரபிரதேசம் (46 லட்சம் இணைப்புகள்), மேற்கு வங்கம் (19 லட்சம் இணைப்புகள்), பிஹார் (19 லட்சம் இணைப்புகள்), மத்தியபிரதேசம் (17 லட்சம் இணைப்புகள்), ராஜஸ்தான் (14 லட்சம் இணைப்புகள்) ஆகியவை உள்ளன.

70 சதவீதமாக அதிகரிப்பு

இத்திட்டம் செயல்படுத்தப் பட்டு வருவதன் மூலம் தேசிய அளவில் எல்பிஜி பயனாளிகள் வட்டம் 61 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக் கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

க்ரைம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

மேலும்