தமிழகத்தில் கல்வித் தரம் மோசமாக உள்ளது: பொன்.ராதாகிருஷ்ணன் வேதனை

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் கல்வியின் தரம் மிக மிக மோசமாக உள்ளது என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வேதனை தெரிவித்தார்.

சேலத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: ‘நீட்’ தேர் வில் தமிழக மாணவர்கள் குறைவாக தேர்ச்சி பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாணவர்களின் கல்வித்தரம் குறைந்திருப்பதை இது காட்டு கிறது.

மாற்றங்கள் தேவை

தமிழகத்தில் கல்வியின் தரம் மிக மிக மோசமாக இருப்ப தற்கு மாநில அரசுதான் காரணம். தமிழக கல்வித்துறை அமைச்சர் கொண்டுவரும் மாற்றங்கள் வரவேற்கத்தக்கது.

நாட்டின் வளர்ச்சிக்காக திட் டங்களை வேகமாக முன்னெடுக் கும் விவகாரத்தில் எண்ணூர் துறை முகம் குறித்து விவாதிக்கப்பட்டது. ஆனால், அதை சிலர் பிரச்சினை யாக்கி பூதாகரமாக மாற்றிவிட்ட னர். நெடுவாசல் ஹைட்ரோ கார் பன் திட்டம் குறித்த விவகாரத்தில் ஏற்கெனவே கூறியதை போல, மக்களின் கருத்தை மாநில அரசு கேட்டு, அதனடிப்படையில் திட்டம் வேண்டாம் என்றால் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிடும்.

தமிழகம் ஒத்துழைக்கவில்லை

எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தகுதியான ஒரு இடத்தை தமிழக அரசு தேர்வு செய்து கொடுக்கவில்லை. கன்னி யாகுமரியில் ஈஎஸ்ஐ மருத்துவ மனை அமைக்க 5 ஏக்கர் நிலம் கேட்கப்பட்டது.

ஆனால், 2 ஆண்டுகளாக நிலத்தை ஒதுக்கி தர மறுத்து வந்த தமிழக அரசு தற் போது, இரண்டரை ஏக்கர் நிலம் தருவதாக அறிவித்துள்ளது.

தமிழகத்துக்கு அதிக திட்டங் களை கொடுக்க மத்திய அரசு முன்வந்தாலும் அவற்றைப் பெற தமிழக அரசு ஒத்துழைப்பு தருவதில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

8 mins ago

விளையாட்டு

10 mins ago

இந்தியா

4 mins ago

தமிழகம்

9 mins ago

தமிழகம்

1 min ago

விளையாட்டு

17 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

28 mins ago

இந்தியா

41 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

7 hours ago

மேலும்