ஆணவக் கொலைகளை தடுக்க தனி சட்டம் இயற்றக்கோரி வழக்கு: தமிழக அரசு, திமுக பதிலளிக்க உத்தரவு

By செய்திப்பிரிவு

ஆணவக் கொலைகளை தடுக்க தனி சட்டம் இயற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு மற்றும் எதிர்க்கட்சியான திமுக, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் ஆகியோர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய மக்கள் மன்றத் தலைவரான வாராகி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் திமுகவும், அதிமுகவும் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்றன. ஆனால் இந்த 2 கட்சிகளும் இதுவரை ஆணவக் கொலைகளைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 2003-ல் கலப்புத் திருமணம் செய்த விருத்தாச்சலம் தம்பதி முருகேசன்- கண்ணகி முதல், திருச்செங்கோடு கோகுல்ராஜ், மன்னார்குடி அமிர்தவள்ளி-பழனியப்பன், சமீபத்தில் உடுமலைப்பேட்டை சங்கர் என தொடர்ச்சியாக ஆணவக் கொலை செய்யப்பட்டு வருகின்றனர்.

கடந்த 3 ஆண்டுகளில் கலப்புத் திருமணம் செய்த 81 பேர் இறந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. ஆணவக் கொலைகள் நடந்தால், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளரும்தான் பொறுப்பேற்க வேண்டும். அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கலாம் என உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.

எனவே, தமிழகத்தில் ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்ற முதலமைச்சருக்கும், எதிர்க்கட்சித் தலைவருக்கும் உத்தரவிட வேண்டும். அதுபோல வன்கொடுமை அதிகம் உள்ள இடங்களில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு தற்காப்பு ஆயுதம் வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் அவர் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் இதுகுறித்து தமிழக அரசு, எதிர்கட்சியான திமுக மற்றும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூலை 27-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 mins ago

தமிழகம்

21 mins ago

கருத்துப் பேழை

29 mins ago

இந்தியா

35 mins ago

விளையாட்டு

10 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

41 mins ago

வலைஞர் பக்கம்

1 hour ago

மேலும்