சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனிடம் ஐம்பொன் சிலைகளை விற்ற காவல் உதவி ஆய்வாளர் கைது: உயரதிகாரியிடம் தீவிர விசாரணை

By செய்திப்பிரிவு

சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனிடம் 10 ஆண்டு களுக்கு முன்பு ஐம்பொன் சிலைகளை விற்பனை செய்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டை அடுத்த ஆலம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ஆரோக்கியராஜ். 2008-ம் ஆண்டு இவரது நிலத்தில் 2 ஐம்பொன் சிலைகள் கிடைத்தன. இதை அரசுக்கு தெரிவிக்காமல், மதுரையை சேர்ந்த நண்பருடன் இணைந்து இந்த சிலைகளை விற்பனை செய்ய ஆரோக்கியராஜ் முயற்சித்துள்ளார்.

இதுபற்றி தகவல் அறிந்த அப்போதைய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ் பெக்டர் காதர் பாஷா, தலைமைக் காவலர் சுப்புராஜ் ஆகியோர் சென்று, அந்த சிலைகளைக் கைப்பற்றினர். அவர்களும் அதை முறைப்படி அரசிடம் ஒப்படைக்காமல், சிலை கடத்தல் வழக்கில் சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட தீனதயாளனிடம் விற்பனை செய்துள்ளனர். தீனதயாளனிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது இத்தகவல் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, தற்போது சென்னையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றிவந்த சுப்புராஜை போலீஸார் கைது செய்தனர். காவல் துறையில் உயரதிகாரியாக இருக்கும் காதர் பாஷாவிடம் விசாரணை நடந்து வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

8 hours ago

உலகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

வேலை வாய்ப்பு

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

கல்வி

11 hours ago

மேலும்