ஜல்லிக்கட்டு போராட்டம் வாபஸ்: சென்னையில் இருந்து தென்மாவட்ட விரைவு ரயில்கள் மீண்டும் இயக்கம்

By செய்திப்பிரிவு

ஜல்லிக்கட்டு போராட்டம் வாபஸ் ஆனதால் முதல் தென் மாவட்டங்களுக்கு வழக்கம்போல் மீண்டும் விரைவு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதற்கிடையே, தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோரை போலீஸார் நேற்று கைது நடவடிக்கை ஈடுபட்டதால், பல்வேறு இடங்களில் ரயில் மறியல் போராட்டம் அதிகரித்தது. இதனால், 5வது நாளாக விரைவு ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டது. சுமார் 150க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டது.

இதற்கிடையே, மாலை 6.30 மணி அளவில் ஜல்லிக்கட்டு போராட்டம் வாபஸ் பெறப்பட்டதால், தென்மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரயில்கள் நேற்று இரவு முதல் வழக்கம்போல் இயக்கப்பட்டன. அதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து திருச்செந்தூர், தூத்துக்குடி, பொதிகை, அனந்தபுரி ஆகிய விரைவு ரயில்கள் நேற்று புறப்பட்டு சென்றன. இதேபோல், தென்மாவட்டங்களில் இருந்து சென்னை எழும்பூர் வரும் விரைவு ரயில்களின் சேவையும் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

சினிமா

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

9 hours ago

வலைஞர் பக்கம்

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்