குடிசைத் தொழில்போல உற்பத்தியாகும் விபரீதம்: மதுவுக்கு இணையாக மனிதரை கொல்லும் போதை பாக்குகள் - கண்டுகொள்ளாத தமிழக சுகாதாரத் துறை

By டி.எல்.சஞ்சீவி குமார்

மதுவுக்கு இணையாக மனிதர் களைக் கொல்லும் போதைப் பாக்கு கள் விற்பனை தமிழகத்தில் அரசியல் பிரமுகர்களின் ஆதரவுடன், அமோக மாக நடந்துவருகிறது. தமிழகம் முழுவதும் குடிசைத் தொழில்போல போதைப் பாக்கு தயாரிப்பு நடந்து வருவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

தமிழகம், ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் குட்கா நிறு வனங்களுக்கு சொந்தமான 30-க் கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறையினர் சில மாதங் களுக்கு முன்பு ஆய்வு நடத்தி னர். ரூ.250 கோடிக்கும் அதிக மாக வருமானவரி ஏய்ப்பு நடந் திருப்பதைக் கண்டுபிடித்தனர். சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 3 தொழிலதிபர்களிடம் நடத்திய விசாரணையில் முக்கிய டைரி ஒன்று சிக்கியது. அதில் போதைப் பாக்கு வியாபாரிகள் ஆளுங்கட்சி அரசியல் பிரமுகர்கள் இடையே நடந்த பணப் பரிவர்த்தனைகள் குறித்த முக்கிய விவரங்கள் சிக்கின. கோவையில் குடோன் களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஏராளமான போதைப் பாக்குகள் கடந்த வாரம் பறிமுதல் செய்யப் பட்டன. இவை அனைத்தும் தமிழ கத்திலேயே உற்பத்தி செய்யப் பட்டவை.

சென்னை செங்குன்றம் பகுதி யில் நடந்த ஆய்வின்போது, 7 கிடங்குகளில் போதைப் பாக்குகள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதும், 3 இடங்களில் தயாரிக்கப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டது.

மெல்லும் புகையிலைப் பொருட் களுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு தடை விதித்தது. ஆனாலும், தமிழகத்தில் இவை பகிரங்கமாக விற்கப்படுகின்றன. 2 ஆண்டு களுக்கு முன்புவரை இவை வட மாநிலங்களில் தயாராகி தமிழகத் துக்கு கடத்தப்பட்டன. வட மாநிலங் கள் தங்கள் பிடியை இறுக்கி விட்ட நிலையில், ஆந்திரா, தெலங் கானாவில் இருந்து அதிக அளவில் தமிழகத்துக்கு வருகின்றன.

தவிர, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருச்சி, மதுரை, சேலம், கோவை ஆகிய பகுதிகளில் குடிசைத் தொழில்போல குட்கா உற்பத்தி நடக்கிறது. டெல்லி, கர் நாடகா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங் களின் போலி முகவரியுடன் பெட்டிக் கடைகளில் இதை விற்கின் றனர். ரூ.10 முதல் ரூ.20 வரையி லான விலையில் கங்கா, துர்கா, விநாயக், லட்சுமி ஆகிய சங்கேதப் பெயர்களில் விற்கப்படும் இவை வீரியம் மிக்கவை. வாயில் ஒதுக்கிக் கொண்டால் நாள் முழுவதும் போதை நீடிக்கும். பசி எடுக்காது.

எப்படி நடக்கிறது உற்பத்தி?

பாக்குத் தூள், பதப்படுத்தப் பட்ட புகையிலை, பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்க பயன்படுத்தப் படும் க்ளாச்சு அமிலம் (Catechu Acid), சாயப்பட்டறைகளில் பயன் படுத்தப்படும் Catechol Chemical, மண்ணெண்ணெய், சுண்ணாம்பு, பேக்கிங் சோடா (Sodium Bicarbonate) ஆகியவை குட்காவுக் கான கச்சா பொருட்கள். சுண்ணாம் பைக் கொதிக்கவைத்து அதில் பேக்கிங் பவுடர், மண்ணெண் ணெய், பாக்குத் தூள், புகையிலை மற்றும் சில ரசாயனங்களைக் கலப்பார்கள். இது லேகியம் பதத்துக்கு வந்ததும் ஆறவைத்து பொட்டலம் கட்டி விற்கிறார்கள்.

புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதில் உலகில் 4-வது இடத்தில் இருக்கிறது இந்தியா. நம் நாட்டில் 27 கோடி பேர் போதைப் பாக்கு உள்ளிட்ட மெல்லும் வகை புகையிலைப் பொருட்களை பயன் படுத்துகின்றனர். இதில் சுமார் 50 சதவீதம் பேருக்கு புற்றுநோய் உள்ளது. சராசரியாக 6 மணி நேரத்துக்கு ஒரு இந்தியர் வாய்ப் புற்றுநோயால் இறக்கிறார்.

ஆளுங்கட்சி பிரமுகர்களின் ஆதரவோடு விற்பனை நடப்ப தால், சுகாதாரத் துறையும் கண்டு கொள்வதில்லை. மதுவுக்கு எதிராக மட்டுமின்றி, குட்கா போன்ற போதைப் பொருட்களுக்கு எதிராக வும் போராடவேண்டிய தருணம் வந்துவிட்டது!

வாய்ப் புற்றுநோயில் சென்னை முதலிடம்

தேசிய மருத்துவ இதழ் (இந்தியா) வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில் கூறியிருப்பதாவது:

உலகின் ஒட்டுமொத்த புற்றுநோய் பாதிப்பில் 25 சதவீதம் இந்தியாவில் ஏற்படுகிறது. சென்னை புற்றுநோய் பதிவேடு மற்றும் திண்டுக்கல் அம்பிலிக்கை புற்றுநோய் பதிவேடுகளை வைத்து நடத்திய ஆய்வுகளின்படி நாட்டிலேயே வாய்ப் புற்றுநோய் பாதிப்பில் சென்னை முதலிடத்தில் இருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

கருத்துப் பேழை

26 mins ago

தமிழகம்

24 mins ago

இந்தியா

43 mins ago

இந்தியா

50 mins ago

இந்தியா

56 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

56 mins ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

மேலும்