அரசு கூர்நோக்கு இல்லங்களில் உள்ள சிறார்களுக்கு கவுன்சலிங் வழங்க சிறப்பு ஏற்பாடு

By செய்திப்பிரிவு

சட்டப்பேரவையில் நேற்று நடந்த சமூக நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதிலளித்து வி.சரோஜா கூறியதாவது:

தமிழகத்தில் 7 கூர்நோக்கு இல்லங்கள், 2 சிறப்பு இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன. கூர்நோக்கு மையங்களில் சிறார்களும், சிறுமிகளும் எதிர்கொள்ளும் உளவியல், சமூகம் சார்ந்த பிரச்சினைகளை கவுன்சலிங் மூலம் சரி செய்யவும், சமூகத்தில் நல்ல குடிமக்களாக அவர்களை உருவாக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அவர்களுக்கு கவுன்சலிங் வழங்குவதற்காக ரூ.16.20 லட்சம் நிதி ஒதுக்கப்படும்.

இதன்மூலம் உளவியல், ஆற்றுப்படுத்துதல் துறையில் முதுகலை பட்டம் பெற்ற வல்லுநர்களைக் கொண்டு சிறார்களுக்கு 2 நாட்களுக்கு ஒருமுறை ஆண்டு முழுவதும் கவுன்சலிங் வழங்கப்படும்.

இளைஞர் நீதிச்சட்டம் 2015-ன் படி கொடுஞ்செயல் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட சிறுவர்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும். அதனடிப்படையில், கொடுஞ்செயல் குற்ற வழக்குகளின் கீழுள்ள 16 முதல் 18 வயதான சிறுவர்களுக்காக வேலூரில் உள்ள வரவேற்பு இல்ல வளாகம் ரூ.42 லட்சம் செலவில் சீரமைப்புச் செய்யப்பட்டு, பாதுகாப்பு இடமாக மாற்றப்படும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

19 mins ago

க்ரைம்

23 mins ago

சுற்றுச்சூழல்

59 mins ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

சுற்றுலா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்