பழைய வண்ணாரப்பேட்டையில் மக்கள் பீதி: வீட்டில் தரையை துளைத்து வெளியேறிய ரசாயனக்கலவை- மெட்ரோ ரயில் ஊழியர்கள் அகற்றினர்

By செய்திப்பிரிவு

மெட்ரோ ரயில் பணியால், பழைய வண்ணாரப்பேட்டையில் ஒரு வீட்டில் தரையைத் துளைத்துக் கொண்டு ரசாயனக் கலவை வெளி யேறியது. வீட்டில் 4 அடி உயரம் வரை பரவிய கலவை தெருவிலும் வழிந்தோடியதால் மக்கள் பீதியடைந்தனர். மெட்ரோ ரயில் ஊழியர்கள் விரைந்து வந்து அதை அகற்றினர்.

சென்னை வண்ணாரப்பேட்டை யில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வரை 9.5 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி நடந்துவருகிறது. இதில் பழைய வண்ணாரப்பேட்டை தங்கசாலை மேம்பாலம் பகுதியில் இருந்து தண்டையார்பேட்டை வரை யில் சுரங்கப்பாதை அமைக்கப் படுகிறது. இதற்கான சுரங்கப்பாதை தோண்டும் பணி நடந்துவருகிறது.

இந்நிலையில், பழைய வண் ணாரப்பேட்டை கிழக்கு முத்தையா தெருவில் உள்ள ஒரு வீட்டுக்குள் நேற்று காலை திடீரென தரையை துளைத்துக்கொண்டு ரசாயனக் கலவை வெளியேறியது. வீடு முழு வதும் சுமார் 4 அடி உயரத்துக்கு ரசாயனக் கலவை பரவியது. வீட்டில் இருந்தவர்கள் இதைப் பார்த்து பீதியடைந்து, வெளியே ஓடினர். வீட் டில் இருந்து வெளியேறிய கலவை, தெருவிலும் வழிந்து ஓடியது. தெரு முழுவதும் ரசாயனக் கலவை பரவி இருந்ததால் வீடுகளில் இருந்தவர் கள் வெளியே வர முடியாமல் தவித்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து மெட்ரோ ரயில் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடி யாக மெட்ரோ ரயில் ஊழியர்கள் விரைந்து வந்தனர். வீட்டிலும், தெருவிலும் பரவி இருந்த ரசாயனக் கலவையை அப்புறப்படுத்தினர்.

இதுபற்றி அந்த வீட்டின் உரிமையாளர் எம்.முகமது யூசுப் கூறியதாவது:

எங்கள் வீட்டின் தரைதளத்தில் செரீப் (60) என்பவர் வாடகைக்கு வசிக்கிறார். இவருக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மூத்த மகள் 9 மாத கர்ப்பிணி. செரீப் தாம்பரம் சென்றிருந்தார். இரவில் அவரது பிள்ளைகள் மட்டும் வீட்டில் இருந்தனர்.

காலை 6 மணி அளவில் திடீரென ரசாயனக் கலவை வெளியேறியது. இதனால், அவர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்து வெளியே ஓடி வந்தனர். வீட்டில் சுமார் 4 அடி உயரத்துக்கு ரசாயனக் கலவை தேங்கியதால், பல பொருட்கள் நாசமாகிவிட்டன.

முத்தையா தெருவில் கடந்த 13-ம் தேதி ரசாயனக் கலவை வெளி யேறியது. திடீர் திடீரென ரசாயனக் கலவை வெளியேறுவதால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதற்கு மெட்ரோ ரயில் நிறுவனம் நிரந்தர தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுதொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறியபோது, ‘‘மெட்ரோ ரயில் பணி தொடங்கு வதற்கு முன்பு இப்பகுதியில் ஆழ்துளைக் கிணறு இருக்கிறதா என்று ஆய்வு நடத்தப்பட்டது. ஆழ்துளை கிணறு இருப்பதாக அப்போது கூறவில்லை. கூறியிருந் தால், தகுந்த முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். அந்த ஆழ்துளைக் கிணறு வழியாக தற்போது கலவை வெளியேறியுள்ளது. வெளியேறிய கலவையை அகற்றும் பணி நடந்துவருகிறது. மீண்டும் இவ்வாறு நடக்காத வகையில் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

8 hours ago

உலகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

வேலை வாய்ப்பு

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

கல்வி

11 hours ago

மேலும்