இந்திய மீனவர்கள் எல்லை தாண்டுவதாக இலங்கை அரசு இணையதளத்தில் புகார்: உண்மையில்லை என தமிழக மீனவர்கள் வாதம்

By கே.சுரேஷ்

தமிழகத்தின் கடலோரப் பகுதி களில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப் படுகின்றனர்.

இதுவரை நூற்றுக்கணக்கான தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறை தண்டனை முடிந்தபிறகு மீனவர் கள் விடுவிக்கப்படும்போது பறிமுதல் செய்யப்பட்ட படகு, வலை ஆகியவற்றைத் திருப்பித் தருவதில்லை.

இவ்வாறு கைது செய்யப்படு வதற்கு கடலில் எல்லைப் பிரச்சினை மட்டுமே பிரதானமாக முன்னிறுத்தப்படுகிறது. அதாவது, இந்திய கடல் பகுதிக்குள் வந்து இலங்கை கடற்படையினர் கைது செய்கின்றனர் என இந்திய மீனவர் களும், கண்ணுக்கு எட்டும் தூரம் வரை இந்திய மீனவர்கள் அத்துமீறி வந்து மீன்பிடிப்பதால்தான் சிறை பிடிக்கப்படுகின்றனர் என இலங்கை அரசும் கைது நடவடிக் கைக்குப் பிறகு காரணமாகச் சொல்கின்றனர்.

தொடர்ந்து தமிழக மீனவர்கள் அதிகம் கைது செய்யப்படுவதால் இதைத் தடுக்க வேண்டுமென தமிழக மீனவர்கள், தமிழக முதல்வர், பல்வேறு கட்சியினர் இந்திய அரசை வலியுறுத்து கின்றனர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களும் இது குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அவ்வப்போது பதிலளிக்கின்றனர். இருந்தாலும் கைது நடவடிக்கை நின்றபாடாக வும் இல்லை. அதற்கு தீர்வு காணப்பட்டதாகவும் இல்லை. இதில் பாதிக்கப்படுவது கூலிக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர் களே.

இந்நிலையில் தமிழக மீனவர் கள் இலங்கை கடற்பகுதிக்கு அத்துமீறி வந்து மீன்பிடிப்ப தாலேயே தாங்கள் சிறைபிடித்துச் செல்வதாக இலங்கை கடற்படை யினர் தங்களது இணையதளத் தில் அன்றாடம் படங்களு டன் தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.

40 மீனவர்கள் சிறை பிடிப்பு

அதில் குறிப்பாக கடந்த டிச.28-ம் தேதி இரவு புதுக் கோட்டை மாவட்டம் கோட்டைப் பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டி னம் மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித் துச் சென்றது.

டிச. 29-ம் தேதி இரவு மண்டபம் நாட்டுப்படகு மீனவர்கள் 18 பேர் சிறைபிடிக்கப் பட்டனர் என்ற தகவலையும், இதற்கு இலங்கை கடற்பகுதியில் இந்திய மீனவர்கள் மீன்பிடித்ததால் தான் கைது செய்துள்ளதாகவும், அதை அந்தப் படகுகளில் பொருத்தப்பட்டுள்ள ஜிபிஎஸ் கருவியிலேயே பதிவாகி இருப் பதாகவும் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களின் பட்டிய லோடு படகு, மீனவர்களின் படங் களும் வெளியிடப்பட்டுள்ளன.

இவ்வாறு தங்களது இணைய தளத்தில் இலங்கை கடற்படை தகவல் வெளியிடுவது கைது நடவடிக்கையை நியாயப்படுத்து வதற்கான நடவடிக்கையே தவிர அது உண்மையல்ல என மறுக்கும் தமிழக மீனவர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள், மத்திய அரசு சார்பில் ஜனவரி மாதம் ஏற்பாடு செய்யப் பட்டுள்ள இருநாட்டு மீனவர்களின் பேச்சுவார்த்தையின் மூலம் இதற்கு தீர்வு காணப்படும் என்கின்றனர் மத்திய அரசு அளித்துள்ள வாக்குறுதியை நம்பி காத்திருக்கின்றனர்.

ஒவ்வொரு நொடிப்பொழுதும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர் பாக கட்சியினர் தீவிர ஆலோ சனையில் ஈடுபட்டிருக்கும் நிலையில் மீனவர்களின் பிரச்சினை தேர்தலுக்குள் தீர்க்கப்படுமா அல்லது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக இடம்பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 mins ago

தமிழகம்

20 mins ago

கருத்துப் பேழை

28 mins ago

இந்தியா

34 mins ago

விளையாட்டு

9 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

40 mins ago

வலைஞர் பக்கம்

1 hour ago

மேலும்