கூடங்குளத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் இதுநாள்வரை ஏன் நடத்தவில்லை?: கமல்ஹாசன் கேள்வி

By ஏஎன்ஐ

கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினைகள் தொடர்பாக பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் இதுநாள்வரை ஏன் நடத்தவில்லை என மக்கள் நீதி மயம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் கூடங்குளம் அணுக்கழிவுகளால் எந்தவித பாதிப்பும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் சில சந்தேகங்களை எழுப்பியுள்ளார்.

கூடங்குளம் தொடர்பாக கமல்ஹாசன் இன்று தெரிவித்துள்ள கருத்து வருமாறு:

கூடங்குளத்தில் கிடைக்கும் உற்பத்தியைவிட விட அதற்கான செலவு அதிகம் என்று கூறப்படுகிறது. கூடங்குளம் உற்பத்தி அதன் முழு உற்பத்தி நிலையில் இல்லை.

கூடங்குளம் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் இப்போது வரை நடத்தவில்லை. அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உங்கள் நிரந்தர திட்டம் என்ன?

கூடங்குளத்திலிருந்து வெளியேற்றப்படும் அணுக்கழிவுகளை எங்கே சேமிப்பது அல்லது கொட்டுவது? இது மக்களுக்கு தெளிவுப்படுத்தப்பட வேண்டும் '' என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தி திணிப்பை ஏற்க முடியாது

கல்வித்துறையில் மும்மொழி திட்டம் கொண்டுவருவது குறித்து கமல் ஹாசன் தெரிவித்ததாவது:

பொதுமக்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் இல்லை. அதே நேரம் ஒரு தேசத்தின் மக்கள் மீது ஒரு மொழியைத் திணிக்க முடியாது.

இந்தி ஒரு முறை கட்டாயப்படுத்தப்பட்டது, ஆனால் நாங்கள் அதை ஏற்கவில்லை. நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல, ஆனால் ஒரு மொழியை கட்டாயப்படுத்துவது அல்லது திணிப்பது ஏற்கத்தக்கது அல்ல. நாங்கள் அதை ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை எங்களுக்கு விளக்குங்கள்''

இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

5 hours ago

வலைஞர் பக்கம்

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

7 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்