மத்திய, மாநில அரசுகளை வீழ்த்துவதற்காக திமுக தலைமையில் மதிமுக அணி சேர்ந்து பணியாற்றும்: மதிமுக மாநில மாநாட்டில் தீர்மானம்

By செய்திப்பிரிவு

மத்திய பாஜக அரசு மற்றும் அதிமுக அரசு ஆகியவற்றை வீழ்த்துவதற்காக திமுக தலைமை யில் மதிமுக தனது அரசியல் கடமைகளை மேற்கொள்ளும் என ஈரோட்டில் நடந்த மதிமுக முப்பெரும் விழா மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற் றக் கழகத்தின் சார்பில் பெரியார், அண்ணா பிறந்தநாள் விழா, மதிமுக வெள்ளி விழா, வைகோவின் பொதுவாழ்வு பொன்விழா ஆகிய முப்பெரும் விழா மாநில மாநாடு ஈரோட்டை அடுத்த மூலக்கரையில் நேற்று காலை தொடங்கியது. மாநாட்டுக்கு மதிமுக அவைத்தலை வர் சு.துரைசாமி தலைமை வகித் தார். மதிமுக பொருளாளர் அ.கணேசமூர்த்தி மாநாட்டைத் தொடங்கி வைத்தார். மதிமுக துணைப்பொதுச்செயலாளர் துரை.பாலகிருஷ்ணன் மதிமுக கொடியை ஏற்றி வைத்தார். மல்லை சி.இ.சத்யா வரவேற்புரை யாற்றினார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ முன்னிலை யில், மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:

மக்களாட்சி தத்துவத்தை கேள்விக்கு உள்ளாக்கி வருகின்ற மத்திய பாஜக அரசு மற்றும் அதன் கைப்பாவையாக இயங்கி வருகிற அதிமுக அரசு ஆகிய இரண்டையும் வீழ்த்துவதற்காக திமுக தலைமையில், தோழமைக் கட்சிகளுடன் அணி சேர்ந்து, மதிமுக தனது அரசியல் கடமை களை மேற்கொள்ளும்.

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி, நீரைத் திறந்து விட வேண்டிய சட்டப் பொறுப்பை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணைகள் கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது.

காவிரிப் படுகையில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் மற்றும் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைக்கும் திட்டங்களை மத்திய அரசு கைவிட்டு, பாசனப்பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தர மாக மூடுவது தொடர்பாக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண் டும். நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய அரசு முடி வெடுத்தால், மக்கள் அறப்போர் கிளர்ச்சி வெடிக்கும். கெயில் எரி வாயு குழாய்களை தேசிய நெடுஞ்சாலை வழியாக கொண்டு செல்ல வேண்டும்.

பாண்டியாறு - புன்னம்புழா திட்டம் தொடர்பாக கேரளாவுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். சேலம் - சென்னை இடை யேயான எட்டுவழிச்சாலை திட்டத் தைக் கைவிட வேண்டும். லோக் ஆயுக்தா சட்டத்தில் திருத்தங் களைக் கொண்டு வர வேண்டும்.

தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழில் உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 35 தீர்மானங்கள் மாநாட்டில் நிறை வேற்றப்பட்டன. முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

1 min ago

தமிழகம்

16 mins ago

தமிழகம்

24 mins ago

வாழ்வியல்

30 mins ago

தமிழகம்

54 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்