மத்திய அமைச்சரவையில் திமுக சேருவதாக வெளியான தகவல்: டி.ஆர். பாலு மறுப்பு

By செய்திப்பிரிவு

மத்திய அமைச்சரவையில் திமுக சேருவதாக வெளியான பத்திரிக்கை தகவல் தவறு என திமுக நாடாளுமன்ற கட்சித் தலைவர் டி.ஆர் பாலு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்‘‘ நாடாளுமன்றம் ஒவ்வொரு முறையும் கூடுவதற்கு முன்னால் நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கு பொறுப்பேற்றுள்ள அமைச்சர்கள் எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்து கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெற ஆதரவு கேட்பது வழக்கமான ஒன்று

அந்த நடைமுறைப் பழக்கப்படி நாடாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர்.பிரகலாத் ஜோஷி, இணை அமைச்சர் திரு.அர்ஜீன்ராம் என்னுடன் கலந்து பேசியதும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டதும் உண்மைச் செய்திகள்.

அவர்கள் என்னிடம் பேசிய போது நாடாளுமன்ற நடவடிக்கைகள் எந்தெந்த தேதிகளில் எத்தகைய நிகழ்வுகள் அரசாங்கம் மேற்கொள்ளவிருக்கிறது என்பதை தெரியப்படுத்தினர்

ஆனால் ஆறு மாதம் கழித்து திமுக உறுப்பினர்கள் பாஜக மத்திய அமைச்சரசையில் இடம் பெறுவார்கள் என்ற தவறான செய்தி பத்திரிக்கையில் வெளியாகியுள்ளது. திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலினின் அடியொற்றி பயணிக்கின்ற உண்மை தொண்டர்களும் வெளிப்படையானவர்கள் மட்டுமல்ல; ஒளிவு மறைவற்ற, நேர்மையான ஜனநாயகத்தின் ஊற்று கண்கள் என்பவற்றை வரலாறு அறியும். இதில் ஜனநாயக குருடர்களுக்கு வேலை இல்லை’’ என டிஆர் பாலு தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

19 mins ago

கருத்துப் பேழை

3 mins ago

தமிழகம்

39 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

6 hours ago

தமிழகம்

6 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்