வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு தண்ணீர் அனுப்புவது நிறுத்தம்: என்எல்சி சுரங்க உபரிநீரை வழங்க மாற்று ஏற்பாடு

By செய்திப்பிரிவு

கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு தண்ணீர் அனுப்புவது நேற்று மாலையுடன் நிறுத்தப்பட்டது. மாற்று ஏற்பாடாக வடலூரில் இருந்து தண்ணீர் அனுப்பப் படுகிறது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே வீராணம் ஏரியில் இருந்து தினமும் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 72 கனஅடி தண் ணீர் திறக்கப்பட்டது. இதனால் நீர்மட்டம் வேகமாகக் குறைந்து வருவதால் சென்னைக்கு தண்ணீர் அனுப்புவது நேற்று மாலையுடன் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் மாற்று ஏற்பாடாக என்எல்சி சுரங்க உபரிநீர், வடலூர் அருகே பரவனாற்றில் தேக்கி வைக்கப்பட்டு, அங்கிருந்து சென்னைக்கு அனுப்பப்படுகிறது. இதன் மூலம் விநாடிக்கு 20 கன அடி தண்ணீர் சென்னைக்கு அனுப்பப்படுகிறது.

‘இன்னும் ஓரிரு நாட்களில் இந்த தண்ணீரின் அளவு அதிகரிக்கப்படும். பரவனாற்றில் வரும் என்எல்சி சுரங்க உபரி நீரை வைத்து, இந்த ஆண்டு சென்னைக்கு தேவையான தண்ணீர் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று சென்னை பெருநகர குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

3 mins ago

க்ரைம்

7 mins ago

இந்தியா

5 mins ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

சுற்றுலா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

51 mins ago

தமிழகம்

3 hours ago

மேலும்