தமிழகத்தில் பெண்கள் மீது அமில வீச்சு அதிகரிப்பு: அனைத்திந்திய மாதர் சங்கம் வேதனை

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் பெண்கள் மீது அமில வீச்சு அதிகரித்து வருகிறது. இதை தடுத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அனைத்திந்திய மாதர் சங்கத்தின் தேசிய தலைவர் மாலினி பட்டாசார்யா தெரிவித்தார்.

சேலத்தில் அனைத்திந்திய மாதர் சங்க மாநில மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது. இரண்டாவது நாளான நேற்று, அனைத்திந்திய மாதர் சங்கத்தின் தேசிய தலைவர் மாலினி பட்டாசார்யா கலந்து கொண்டார்.

அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

தமிழகத்தில் பெண்கள் மீது அமில வீச்சு அதிகரித்து வருகிறது. இதை தடுத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் தொடர்பாக வழக்கு பதிவு செய்ய மறுக்கும் காவலதுறையினர் மீதும் நடவடிக்கை எடுக்கும் சட்டத்தை தமிழகத்தில் அமுல்படுத்த வேண்டும். தமிழகத்தில் நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை முறையாக, முழுமையாக செயல்படுத்திட வேண்டும் ,என்றார்.

அமில வீச்சு சம்பவங்கள் குழந்தை பாலியல் வன்முறை போன்ற பல்வேறு சம்பவங் களுக்கு காரணமான அரசு மதுபான கடையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி அனைத்திந்திய மாதர் சங்கத்தின் சார்பில் விரைவில் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என, அனைத்திந்திய மாதர் சங்க துணைத் தலைவர் சுதா தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

52 mins ago

சினிமா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

5 hours ago

வலைஞர் பக்கம்

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

7 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்