கே.பெரியபட்டியில் பள்ளியைத் தரம் உயர்த்தாதைக் கண்டித்து தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு

By செய்திப்பிரிவு

பள்ளியைத் தரம் உயர்த்தாதைக் கண்டித்து, மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பதாக கே.பெரியபட்டி கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள கே.பெரியப் பட்டியில்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு பயிலும் மாணவ, மாணவிகள் 9,10-ம் வகுப்புகளில் சேர,  10 கி.மீ தொலைவிலுள்ள மணப்பாறைக்கு சென்று வர வேண்டியுள்ளது. அதற்கேற்ப போதுமான போக்குவரத்து வசதிகள் இங்கு இல்லை.

இதனால், கே.பெரியபட்டி மற்றும் அதனருகிலுள்ள சுக் கம்பட்டி, மொண்டிப்பட்டி, சத்திரப்பட்டி, சீத்தப்பட்டி, போடுவார்பட்டி, பூங்குடி பட்டி, ஊத்துப்பட்டி, செல்லகவுண்டம் பட்டி, தெற்கு சேர்ப்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டு வந்தனர். இதைத்தவிர்க்க, கே.பெரியபட்டி பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வலியுறுத்தி கடந்த 4 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இதுவரை பள்ளி தரம் உயர்த்தப்படவில்லை.

இதைக்கண்டித்து, மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக அந்த கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.

அரசியல் கட்சிகள் மற்றும் அரசுக்கு இதைத் தெரியப்படுத்தும் வகையில் கிராமத்தின் பல்வேறு இடங்களில் இதுதொடர்பான பதா கைகள் வைக்கப்பட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

9 hours ago

க்ரைம்

9 hours ago

உலகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

வேலை வாய்ப்பு

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

விளையாட்டு

12 hours ago

மேலும்