தலைமன்னார் - தனுஷ்கோடி வரையிலான 30 கி.மீ. தூரத்தை மிகக் குறைந்த வயதில் நீந்தி சிறுவன் சாதனை

தலைமன்னாரில் இருந்து தனுஷ் கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை மிகக் குறைந்த வயதில் தேனியைச் சேர்ந்த 4-ம் வகுப்புப் பயிலும் மாணவன் நீந்தி சாதனை படைத்துள்ளான். இதன் மூலம் குற்றாலீசுவரனின் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

பாக் ஜலசந்தி கடற்பகுதி இந்தியாவையும் இலங்கையையும் பிரிக்கும் நீரிணை ஆகும். தமிழகத் திலேயே மிகவும் ஆழம் குறைந்த அதே சமயம் நீரோட்டங்கள் நிறைந்த பாறைகள், ஆபத்தான ஜெல்லி மீன் கள், கடல் பாம்புகளை உள்ளடக் கிய கடற்பகுதியாகும்.

இலங்கை வல்வெட்டித் துறை யைச் சேர்ந்த நவரத்தினசாமி என்ற தமிழர் 1954-ல் முதன்முதலாக வல் வட்டித் துறையில் இருந்து வேதாரண்யம் வரையிலுமான 34 நாட்டிக்கல் மைல் தொலைவிலான பாக் ஜலசந்தி கடல்பகுதியை முதன் முறையாக நீந்தி கடந்து சாதனை புரிந்தார். மேலும் வல்வெட்டித் துறையைச் சேர்ந்த வழக்கறிஞர் குமார் ஆனந்தன் 1971-ல் தலைமன் னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி வந்து மீண்டும் தலை மன்னாருக்கு நீந்தி சாதனை படைத் தார். 1994-ல் 12 வயதே ஆன குற்றாலீசுவரன் பாக் ஜலசந்தியை நீந்திக் கடந்தார்.

இந்நிலையில், இலங்கையில் உள்ள தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான பாக் ஜல சந்தி கடற்பகுதியை நீந்தி கடப்பதற் காக தேனி மாவட்டம் அல்லிநகரத் தைச் சேர்ந்த ரவிக்குமார்-தாரணி தம்பதியின் மகன் ஆர்.ஜெய் ஜஸ் வந்த்(10) இந்திய வெளியுறவுத் துறை, இலங்கை தூதரகம் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சகத் துக்கு அனுமதி கோரி இருந்தார்.

அனுமதி கிடைத்த நிலையில், பயிற்சியாளர் எம்.விஜயகுமார் மற்றும் மீனவர்கள் படகில் பய ணிக்க ஜெய் ஜஸ்வந்த், தலை மன்னாரில் நேற்று அதிகாலை 4 மணிக்கு நீந்தத் தொடங்கி, பிற்பகல் 2.30 மணியளவில் 30 கி.மீ. தூரத்தை கடந்து தனுஷ்கோடி அரிச்சல் முனையை வந்தடைந் தார். இவருக்கு ஏடிஜிபி சைலேந்திர பாபு தலைமையில் காவல்துறையினர், கடலோரப் பாதுகாப்புக் குழுமத்தினர், இந்திய கடலோரக் காவல் படையினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பயிற்சியாளர் ஆர்.விஜய குமார் செய்தியாளர்களிடம் கூறி யது: தலைமன்னார் அருகே உறு மலை என்ற இடத்தில் அதிகாலை 4 மணிக்கு நீந்தத் தொடங்கியபோது இருட்டாக இருந்ததால் முதலில் மெதுவாக நீந்தினார். பின்னர் சூரியன் உதயமானதும் தனது வேகத்தை அதிகப்படுத்தி காலை 9.35 மணியளவில் சர்வதேச கடல் எல்லையை ஜெய் ஜஸ்வந்த் கடந்தார்.

நீரோட்டத்தின் வேகம் அதிகமாக இருந்தது. ஜெல்லி மீன்கள் அதிக அளவில் இருந்தன. ஜெல்லி மற்றும் ஆபத்தான மீன்களை எதிர்கொள்ள உடம்பில் பிரத்யேக பேஸ்டை பூசி யிருந்ததால் பிரச்சினை ஏதும் ஏற்பட வில்லை. தொடர்ந்து பிற்பகல் 2.30 மணியளவில் அரிச்சல் முனைக்கு வந்தடைந்து, பாக் ஜலசந்தி கடலை 10.30 மணி நேரத்தில் கடந்து சாதனை படைத்துள்ளார் என்றார்.

இதுவரை பாக் ஜலசந்தியை நீந்திக் கடந்தவர்களில் குறைந்த வயதுடையவர் ஜெய் ஜஸ்வந்த் (10) என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் குற்றாலீசுவரனின் சாதனையை முறியடித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

47 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

க்ரைம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

வணிகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்