வங்கியில் கடன் பெற்றுத் தருவதாக நூதன மோசடி செய்த 4 பேர் கைது: 3 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்

By செய்திப்பிரிவு

வங்கியில் குறைந்த வட்டியில் கடன் பெற்றுத் தருவதாக நூதன மோசடியில் ஈடுபட்ட முக்கிய நபரின் தாய், தந்தை, சசோதரி, உதவியாளரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.

கொளத்தூரைச் சேர்ந்தவர் பத்மநாதன் பாபு. இவரது செல்போனுக்கு அழைப்பு ஒன்று வந்தது. எதிர்முனையில் பேசிய நபர் தான் பிரபல பைனான்ஸ் நிறுவனத்திலிருந்து பேசுவதாகவும் தங்களுக்கு குறைந்த வட்டியில் ரூ.5 லட்சம் கடன் பெற்றுத் தருவதாகவும் முதல் கட்டமாக உங்களது வங்கி கணக்கில் ரூ.50 ஆயிரம் இருப்பு இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு பின்னர் சம்பந்தப்பட்டவர்களின் வங்கி விவரங்களை பெற்று அவர்களின் பணத்தை நூதன முறையில் திருடி வந்தனர். இப்படி பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டது.

இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள வங்கி மோசடி தடுப்பு பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். முதல் கட்டமாக மோசடியில் ஈடுபட்டது 70 பெண்கள் உட்பட 125 பேர் கொண்ட கும்பல் என தெரியவந்தது. இதைத் தொடர்ந்து முதல் கட்டமாக கடந்த மாதம் 26-ம் தேதி 14 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், மோசடிக்கு மூளையாக செயல்பட்டு தற்போது தலைமறைவாக உள்ள கோபி என்ற கோபி கிருஷ்ணனின் உதவியாளர் மாதவரம் பால்பண்ணை மோகன கிருஷ்ணன், கோபி கிருஷ்ணனின் தந்தை ஆவடி வாசு, தாய் மீனாட்சி, சகோதரி நளினி ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

கல்வி

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சுற்றுலா

3 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்