அமைப்புசாரா தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் தினந்தோறும் பிரீமியம் செலுத்தும் புதிய காப்பீட்டு சேவை திட்டம்: எல்ஐசி நிறுவனம் அறிமுகம்

By ப.முரளிதரன்

அமைப்புசாரா தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் தினமும் பிரீமியம் செலுத்தும் வகையில், புதிய காப்பீட்டு சேவைத் திட்டத்தை எல்ஐசி நிறுவனம் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

பொதுமக்களுக்கு ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களை வழங்கும் நிறுவனங்களில், அரசு நிறுவனமான எல்ஐசி நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. அனைத்து தரப்பு மக்களுக்கும் தேவையான பல்வேறு காப்பீட்டுத் திட்டங்களை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது. மண்டல மேலாளர் கருத்துஅமைப்புசாரா தொழிலாளர்கள் தினமும் பிரீமியம் செலுத்தும் வகையில், புதிய காப்பீட்டுசேவைத்திட்டத்தை எல்ஐசி நிறுவனம் சோதனை அடிப்படையில்அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, எல்ஐசி நிறுவனத்தின் மண்டல மேலாளர் ஆர்.தாமோதரன் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியதாவது: சமூகத்தில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் ஆயுள் காப்பீடு வழங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் எல்ஐசி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, அமைப்புசாரா தொழிலாளர்கள், வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள மக்களுக்கும் ஆயுள் காப்பீடு கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் எல்ஐசி நிறுவனம் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. நடைபாதை வியாபாரிகள், வீட்டு வேலை செய்பவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், ரிக்‌ஷா தொழிலாளர்கள், தினசரி கூலி வேலை செய்பவர்கள் உள்ளிட்ட அனைத்து அடித்தட்டு மக்களும் இத்திட்டத்தில் சேரலாம்.

ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட்

இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக மகாராஷ்டிரா வங்கியுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, அமைப்புசாரா தொழிலாளர்கள் காப்பீடு எடுப்பதற்கு முன்பு, மேற்கண்ட வங்கியில் ஒரு சேமிப்புக் கணக்கைத் (ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட்) தொடங்க வேண்டும். அவர்கள் எடுக்கும் காப்பீட்டுக்கான பிரீமியத் தொகையை இந்த வங்கிக் கணக்கில் தினமும் செலுத்த வேண்டும். இதற்காக, அவர்கள் வங்கிக்குச் செல்ல வேண்டியதில்லை. வங்கி ஊழியரேசம்பந்தப்பட்ட பாலிசிதாரரின் இருப்பிடத்துக்கு தினமும் வந்து பணத்தை வசூல் செய்வார்.

அவர் பணத்தை வசூல் செய்ததும் அதற்கான ரசீதை காப்பீட்டுதாரரிடம் வழங்குவார். அந்தப் பணம் காப்பீட்டுத்தாரரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். தினமும் வசூலிக்கப்படும் அந்தப் பிரீமியத் தொகை ஒருமாதம் ஆனதும் மின்னணு பணப்பரிவர்த்தனை மூலம் எல்ஐசி நிறுவனத்துக்கு மாற்றப்படும். தினமும் ரூ.100 செலுத்தலாம்உதாரணமாக, ஒருவர்ரூ.10 லட்சம் மதிப்புள்ள காப்பீட்டை 20 ஆண்டுகளுக்கு எடுத்திருந்தால் மாதம் ரூ.3 ஆயிரம் பிரீமியம் கட்ட வேண்டும். அதேநேரம் இந்தபுதிய முறையில் அவர் தினமும்ரூ.100 செலுத்தலாம். பிரீமியம்தொகையை ஓரிரு நாட்கள் செலுத்த முடியவில்லை என்றாலும் கவலைப்பட தேவையில்லை.

அத்தொகையை அடுத்து வரும் நாட்களில் சேர்த்து செலுத்தலாம். இதனால் நிதிச் சுமை ஏற்படாது. பொதுமக்கள் வரவேற்புதற்போது, கோயம்பேட்டில் உள்ள எல்ஐசி கிளை அலுவலகம் 28-ல் சோதனை அடிப்படையில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. விரைவில் இத்திட்டம் மற்ற கிளைகளிலும் விரிவுபடுத்தப்படும். அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இத்திட்டம் ஓர் வரப்பிரசாதமாக அமையும். இவ்வாறு தாமோதரன் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

22 mins ago

சினிமா

42 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

4 hours ago

வலைஞர் பக்கம்

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

6 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்