தேர்தல் கூட்டணி; பாஜகவை தோளில் தூக்கி சுமக்க நாங்கள் பாவமா செய்தோம்: தம்பிதுரை காட்டம்

By செய்திப்பிரிவு

அதிமுகவுடன் தேர்தல் கூட்டணி என்று குருமூர்த்தி தெரிவித்த கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமாரை தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரையும் பாஜகவை தோலில் சுமக்க நாங்கள் பாவமா செய்தோம் என, எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

2014-ம் ஆண்டு தேர்தலில் தேமுதிக, மதிமுக, பாமக என மெகா கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜக 2019 பாராளுமன்றத்தில் தமிழகத்தில் கூட்டணிக்கு கட்சிகளை தேடும் நிலையில் உள்ளது. திமுக காங்கிரஸ் கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில் அதிமுகவுடன் கூட்டணிக்கு வாய்ப்பு என பாஜக தலைவர்கள் எண்ணுகின்றனர்.

இதை வலுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் பாஜக தலைவர்கள் பேசி வருகின்றனர். இந்நிலையில் ஆடிட்டர் குருமூர்த்தி தமிழகத்தில் பாஜக காலூன்ற அதிமுகவுடன் கூட்டணி அவசியம் எனப் பொருள்படும் விதத்தில் பேசியதாக கூறப்படுகிறது.

இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் அது குருமூர்த்தியின் விருப்பம் பாஜகவுடன் கூட்டணி வைக்க நாங்கள் விருப்பப்படவேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில்

கோவையில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை அளித்த பேட்டி: 

லோக்சபா தேர்தலில் அதிமுக வெற்றியை சீர்குலைக்க திமுக, காங்கிரஸ் கட்சிகளின் முயற்சி எடுபடாது.  குட்கா, கோடநாடு என அதிமுக மீது தவறான குற்றச்சாட்டுகளை சுமத்தி குளிர் காய்வதே திமுகவின் கொள்கை.

ஆடிட்டர் குருமூர்த்தி பாஜக தமிழகத்தில் காலுன்ற அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டுமென கூறியிருப்பது கேலிக்கூத்தாக உள்ளது. நாங்கள் பாடுபடுகிறோம் நிலைத்திருக்கிறோம். பாஜகவை அவர்கள் வளர்க்கட்டும். பாஜகவை சுமந்து செல்ல அதிமுகவினர் பாவம் செய்திருக்கிறார்களா?.

பாஜகவை காலூன்ற வைக்க அதிமுகவினர் தோளில் சுமந்து செல்ல மாட்டோம். லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் சூழலுக்கு ஏற்ப அதிமுக செயற்குழு கூடி முடிவெடுக்கும். அதை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் செயல்படுத்துவார்கள் என்று தெரிவித்தார்.

பாஜகவுடன் கூட்டணி இல்லை எனும் பொருள்பட பாஜக நிர்வாகிகள் பேசி வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 mins ago

இந்தியா

38 mins ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

6 hours ago

வலைஞர் பக்கம்

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்