திருவாரூர் இடைத்தேர்தல்; திமுக வேட்பாளர் யார்?- ஜனவரி 4-ம் தேதி அறிவிப்பு: மு.க.ஸ்டாலின் தகவல்

By செய்திப்பிரிவு

திருவாரூர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுவது யார் என வரும் 4-ம் தேதி அறிவிக்கப்படும் என்று கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

திமுக தலைவர் கருணாநிதி மறைவால் காலியான திருவா ரூர் சட்டப்பேரவை தொகு திக்கு ஜனவரி 28-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படு வதாக தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இதுகுறித்த அறிவிப்பு வெளியானதும் சென்னை அண்ணா அறிவால யத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செய லாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட நிர்வாகிகளுடன் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘திருவாரூர் தொகுதிக்கான திமுக வேட்பாளர் 4-ம் தேதி அறிவிக்கப்படுவார். தமிழகத்தில் மட்டுமல்லாமல், மத்தியிலும் ஆட்சி மாற்றத்துக்கு இத்தேர்தல் வழிவகுக்கும். புத்தாண்டில் புதிய மாற்றங்கள் ஏற்படுவது உறுதி’’ என்றார்.

விருப்ப மனு தாக்கல் குறித்து திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் ஜனவரி 28-ம் தேதி நடக்க உள்ளது. இதில் திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஜனவரி 2-ம் தேதி (நாளை) காலை 10 மணி முதல் 3-ம் தேதி மாலை 6 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

ரூ.1,000 கட்டணம் செலுத்தி விண்ணப்பப் படிவங்களை பெற்றுக் கொள்ளலாம். வேட்பா ளர் விண்ணப்பக் கட்டணம் ரூ.25 ஆயிரம். வேட்பாளரை தேர்வு செய்வதற்கான நேர்காணல் 4-ம் தேதி மாலை 5 மணிக்கு நடக்கும்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

வாழ்வியல்

11 mins ago

தமிழகம்

35 mins ago

இந்தியா

41 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

ஓடிடி களம்

2 hours ago

மேலும்