தமிழக சட்டப்பேரவை வரும் ஜனவரி 2-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது: பேரவை செயலாளர் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் வரும் ஜனவரி 2 ஆம் தேதி தொடங்கும் என, சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிவிப்பில், "தமிழ்நாடு ஆளுநர் இந்திய அரசியலமைப்பு, பிரிவு 174 (1)-ன் கீழ், தமிழ்நாடு சட்டப்பேரவையின் கூட்டத்தை, 2019 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி, புதன்கிழமை, காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் கூட்டியிருக்கிறார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய அரசியலமைப்பு, பிரிவு 176 (1)-ன் கீழ், தமிழ்நாடு ஆளுநர் அன்றைய தினம் காலை 10 மணிக்கு உரை நிகழ்த்துவார்" என தெரிவித்துள்ளார். 

ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், ஆளுநர் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கவிருக்கிறது. அதன்பிறகு அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெறும். எத்தனை நாள் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என்று அன்றுதான் முடிவு செய்யப்படும். ஆளுநர் உரை மீதான விவாதம் எப்போது நடைபெறும், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் குறித்தும் அன்றைய தினம் முடிவு செய்யப்படும். இக்கூட்டத்தொடரில் தமிழகத்திற்கு புதிய திட்டங்களும், நிலுவையில் உள்ள திட்டங்களின் நிலைமை குறித்தும் அறிவிக்கப்படும்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

19 mins ago

இந்தியா

53 mins ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

6 hours ago

வலைஞர் பக்கம்

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்