தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கையாக  இன்று முதல் ஜன.1-ம் தேதி இரவு வரை வாகன சோதனை, கண்காணிப்பு தீவிரம்: அனைத்து போலீஸாருக்கும் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவு

By செய்திப்பிரிவு

புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் ஜன. 1-ம் தேதி இரவு வரை வாகன சோதனையை தீவிரப்படுத்த அனைத்து போலீஸாருக்கும் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட் டுள்ளார்.

புத்தாண்டை முன்னிட்டு அசம்பா வித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும், முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளை எடுப்பது குறித்தும் போலீஸ் அதிகாரிகளுடன் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஆலோசனை நடத்தியுள்ளார். சில ரகசிய தகவல்களின்பேரில் இந்த ஆலோ சனை நடத்தப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, அனைத்து மாவட்ட போலீஸாருக்கும் பாதுகாப்பு முன் னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது குறித்து அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

24 மணி நேரமும்...

மக்கள் அதிகம் கூடும் இடங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் வணிக வளாகங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், கோவை போன்ற முக்கிய ரயில் நிலையங்களில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், கூடுதல் போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத் தப்பட்டுள்ளனர். தொடர்ந்து கண் காணிக்கவும், சந்தேக நபர் களைப் பிடித்து விசாரித்து, உடனே அதுகுறித்த தகவலை தலைமை யிடத்துக்கு தெரிவிக்கவும் உத்தர விடப்பட்டுள்ளது.

உளவுத்துறையினர் எச்சரிக்கை

மேலும், லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந் தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக மத்திய உளவுத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பண்டிகைக் காலங் களில் கூடுதல் கவனத்துடன் செயல்படவும் உளவுத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இன்றுமுதல் ஜன. 1-ம் தேதி இரவு வரை வாகன சோதனையைத் தீவிரப்படுத்த உத்தர விடப்பட்டுள்ளது.

பேருந்து நிலையங்கள் அருகே, தேசிய நெடுஞ்சாலைகள், சுங்கச்சாவடிகளில் கூடுதல் போலீ ஸார் நிறுத்தப்பட்டு, சந்தேகப்படும் விதத்தில் வரும் வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்தவும், இதற்கு தனியாக போலீஸாரை நியமிக்கவும் உத்தர விடப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

க்ரைம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

மேலும்