புதுச்சேரி, வட தமிழக கடலோர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் 8 மீட்டர் உயரத்துக்கு அலை எழும்பும்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள் ளூர் மாவட்ட கடல் பகுதிகளில் 8.1 மீட்டர் உயரத்துக்கு அலை கள் எழும்பக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் இன்காய்ஸ் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து வலுப்பெற்று தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதன் காரணமாக வங்கக் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் இன்காய்ஸ் நிறுவனம் வெளியிட்ட கூட்டறிக் கையில் கூறியிருப்பதாவது:

புயலின் தாக்கத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்ட கடலோரப் பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப் படும். 16-ம் தேதி அதிகாலை 2.30 முதல் 17-ம் தேதி இரவு 11.30 மணி வரை கடலில் சுமார் 10 கிமீ தொலைவு வரை தொலைதூரச் சலனங்களால் ஏற்படும் அலை கள் 2.5 மீட்டர் உயரம் வரையும் அதிகபட்சமாக 4.2 மீட்டர் முதல் 8.1 மீட்டர் உயரம் வரையும் எழும்பக்கூடும். மேலும் தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்ட கட லோரப் பகுதிகளிலும் அதிகபட்ச மாக 5.8 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழும்பும்.

மேலும் வட தமிழக கடலோரப் பகுதிகளில் 15-ம் தேதி மாலை அதிகபட்சமாக மணிக்கு 65 கிமீ வேகத்தில் சுழல் காற்று வீசத் தொடங்கும். பின்னர் மணிக்கு 80 கிமீ வேகத்தில் கடுங்காற்று வீசவும் வாய்ப்புள்ளது. இவ்வாறு கூட்டறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதனிடையே காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய துணை இயக்குநர் ஜெனரல் எஸ்.பாலசந்திரன் நேற்று கூறிய தாவது:

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்ற ழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 930 கிமீ தொலைவில் நிலைகொண்டுள் ளது. இது மணிக்கு 13 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று, ஆந்திர மாநிலம் ஓங்கோல்- காக்கிநாடா இடையே டிசம்பர் 17-ம் தேதி கரையைக் கடக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடலோர மாவட்டங்களில் 15, 16 ஆகிய தேதிகளில் ஒருசில இடங்களில் மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். தரைக்காற்றானது மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத் தில் வீசக்கூடும். இந்த இரு நாட்களில் தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்படும். இவ்வாறு எஸ்.பாலசந்திரன் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

சினிமா

22 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

29 mins ago

சுற்றுலா

41 mins ago

தமிழகம்

43 mins ago

சினிமா

48 mins ago

கருத்துப் பேழை

1 hour ago

இந்தியா

51 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

9 mins ago

மேலும்