சர்ச்சைக்குள்ளான கருத்தரங்கம் ரத்து

By செய்திப்பிரிவு

‘தமிழ் இலக்கியப் பதிவுகளில் பெண் வன்கொடுமைகள்’ என்ற தலைப் பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கருத்தரங்கில் புராணம், இதிகாசங்கள் மற்றும் சங்கத் தமிழ் இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அடிப்படையில் 25 தலைப்புகளில் கட்டுரைகள் அளிக்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. கருத்தரங்கம் மற்றும் கட்டுரைகள் ஆகியவற்றின் தலைப்பு களுக்கு பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா உட்பட பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புக் குரல் எழுந்தது. இதுகுறித்து சமூக வலைதளங்களிலும் விமர்சனங்கள் எழுந்தன. தமிழ் பண்பாட்டுத் துறை அமைச்சர் கே.பாண்டிய ராஜன், அந்தத் தலைப்பில் கருத்தரங்கு நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். இந்தநிலையில், பன்னாட்டுக் கருத்தரங்கம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நேற்று தகவல் வெளியானது. இதுதொடர்பாக கல்லூரி தமிழ்த் துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, ‘‘கல்லூரி மாணவ, மாணவிகள் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளதால் பன்னாட்டுக் கருத்தரங்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

47 mins ago

ஜோதிடம்

51 mins ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

க்ரைம்

7 hours ago

உலகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

வேலை வாய்ப்பு

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

கல்வி

10 hours ago

மேலும்