தமிழகம் முழுவதும் 18 ஆயிரம் கோயில்கள் மென்பொருள் மூலம் வரைபடத்துடன் இணைப்பு: இந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கை 

By செய்திப்பிரிவு

ஆணையர் அலுவலகத்தில் இருந்து அமைவிடத்தை கண்டறிய தமிழகம் முழுவதும் 18 ஆயிரம் கோயில்கள் மென்பொருள் மூல மாக வரைப்படத்துடன் இணைக் கப்பட்டுள்ளது. மீதமுள்ள, கோயில் களை இணைப்பதற்கான பணி களும் தீவிரமாக நடந்து வருகிறது.

தமிழகம் முழுவதும் 38,646 கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களின் அளவிடங்களை புவிசார் தகவல் குறியீடு மூலம் துல்லியமாக அறியும் வகையில் மென்பொருள் மூலமாக வரைப் படத்துடன் இணையதளத்தில் கண்டறிய இந்து சமய அறநிலை யத்துறை முடிவு செய்தது.

இதற்கான பணிகள் மத்திய அரசின் தேசிய தகவல் மையத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோயில்களுக்கும் குறியீடு எண் அளிக்கப்பட்டது . இதுமட்டுமின்றி, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோயில்களையும் வரைப்படத்துடன் இணைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதுவரை தமிழகம் முழுவதும் சுமார் 18 ஆயிரம் கோயில்கள் மென்பொருள் மூலமாக வரைப்படத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கோயில்களின் அமைவிடத்தை ஆணையர் அலுவலகத்தில் இருந்து கண்காணிக்க மென்பொருள் மூலமாக வரைப்படத்துடன் இணைக்கும் பணி நடந்து வருகிறது. இதுவரை சுமார் 18 ஆயிரம் கோயில்கள் வரைப்படத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், எந்தந்த கோயில்கள் எந்த அதிகாரியின் கீழ் உள்ளது என்பன உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பெற முடியும். மீதமுள்ள கோயில்களையும் வரைப்படத்துடன் இணைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிர்வாக பணிகளுக்கு இந்த நடவடிக்கை உதவியாக இருக்கும்.

இதேபோல், ஆக்கிரமிப்பு களை கட்டுபடுத்த கோயிலுக்கு சொந்தமான நிலங்களை பதிவேற்றம் செய்யும் நடவடிக்கை களும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

7 hours ago

உலகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

வேலை வாய்ப்பு

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

கல்வி

10 hours ago

மேலும்