தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கு: மூன்று பேர் விடுதலைக்கு விஜயகாந்த் கண்டனம்

By செய்திப்பிரிவு

தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில்  3 பேர் விடுதலை செய்யப்பட்டதை வன்மையாக கண்டிப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தருமபுரி பேருந்து எரிப்பு சம்பவத்தில் ஆயுள் தண்டணை பெற்று சிறையில் இருந்த அதிமுகவினர் மூவரும் விடுதலை செய்யப்பட்ட நிலையில் இதுகுறித்து அதிமுக அரசையும், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தையும் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மூவரின் விடுதலை குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக  விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், ''ஒரு கண்ணில் சுண்ணாம்பு, மறு கண்ணில் வெண்ணெய்?! அதிமுகவினர் 3 பேரை விடுதலை செய்ய தமிழகஅரசு பரிந்துரை செய்ததுபோல், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்வதற்கு தமிழகஅரசு மெத்தனமாக இல்லாமல் விரைந்து உரிய முறையில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில்   3 பேர் விடுதலை செய்யப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன். மாணவிகள் பேருந்தில் பயணித்த போது, உயிரோடு எரித்துக் கொலை செய்த 3 அதிமுக நிர்வாகிகளை தமிழக அரசின் சிபாரிசுடன் விடுவித்த ஆளுநர்,பேரறிவாளன், முருகன், நளினி உள்பட 7 பேரை ஏன் விடுதலை செய்யவில்லை?'' என்று பதிவிட்டுள்ளார்.

 

 

 

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 mins ago

விளையாட்டு

25 mins ago

வேலை வாய்ப்பு

34 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்