ஆப்டோமெட்ரி மாநாடு தொடக்க விழா: சென்னை வர்த்தக மையத்தில் சனிக்கிழமை நடக்கிறது

By செய்திப்பிரிவு

 

தமிழ்நாடு விழிஒளி ஆய்வாளர்கள் நண்பர்கள் அமைப்பு நடத்தும் விழிஒளி ஆய்வாளர்கள் தேசியக் கருத்தரங்கு சென்னையில் இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சனிக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறும் ஆப்டோமெட்ரி மாநாட்டின் தொடக்க விழாவில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் பங்கேற்று சிறப்புரை ஆற்றுகிறார்.

இது தொடர்பாக தமிழ்நாடு விழிஒளி ஆய்வாளர்கள் நண்பர்கள் அமைப்பின் குழு உறுப்பினர் அ.மகாலிங்கம் கூறியதாவது:

ஆப்டோமெட்ரி துறையில் நிபுணத்துவம் வாய்ந்த வல்லுநர்கள் கலந்துகொள்ளும் உற்சாகமான ஆப்டோமெட்ரி மாநாட்டில் அமைச்சர் பாண்டியராஜன், சங்கர நேத்ராலாயா கண் மருத்துவமனை துணைத் தலைவர் மருத்துவர் டி.எஸ்.சுரேந்திரன், எலைட் ஸ்கூல் ஆப் ஆப்டோமெட்ரி தலைவர் முனைவர் ஆர்.கிருஷ்ணகுமார் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

1000க்கும் மேற்பட்ட துறை சம்பந்தப்பட்ட வல்லுநர்கள், மாணவ - மாணவிகள், ஆப்டோமெட்ரி ஆசிரியர்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்.இம்மாநாட்டில் கலந்து கொள்வதின் மூலம் ஆப்டோமெட்ரி துறை சார்த்த படிப்பு குறித்தும், அத்துறையில் காணப்படுகின்ற பிரகாசமான வேலை வாய்ப்பு குறித்த தகவல்களையும் பெற முடியும்.

இந்த மாநாட்டில் கலந்து கொள்பவர்களுக்கு தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 30 கிரெடிட் புள்ளிகளும், அத்துடன் ஆப்டோமெட்ரி கவுன்சிலின் கிரெடிட் புள்ளிகளும் வழங்கப்படும்.

மேலும், தலைசிறந்த கண் மருத்துவர்களான சங்கர நேத்ராலயா நிறுவனத்தின் தலைவர் டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத், அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர் எஸ்.அரவிந்த், அகர்வால் கண் மருத்துவமனை தலைவர் டாக்டர் அமர் அகர்வால், மணிப்பால் பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவர் டாக்டர் கே.ராம் நாராயணன், அமெரிக்கா சின்ஸின்சிட்டி பல்கலைக்கழகத்தின் தலைவர் மற்றும் அமெரிக்க கண் மருத்துவக் கழகம், உலக சுகாதார நிறுவன கண் மருத்துவர் கார்ல் கோல்நிக் ஆகியோரிடமிருந்து இந்த மாநாட்டிற்கு வாழ்த்துச் செய்திகள் வந்துள்ளன'' என்று தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு 97104 85295 / 94885 12010 என்ற தொலைபேசி எண்களுக்குத் தொடர்பு கொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

கல்வி

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

4 hours ago

க்ரைம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

சினிமா

10 hours ago

கல்வி

10 hours ago

மேலும்