கேரளாவுக்கு 2.8 லட்சம் லிட்டர் குடிநீர் தெற்கு ரயில்வே சார்பில் அனுப்பி வைப்பு

By செய்திப்பிரிவு

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட மக்களுக்கு உதவும் வகை யில், தெற்கு ரயில்வே சார்பில் 2.8 லட்சம் லிட்டர் குடிநீர் ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் வரலாறு காணாத அளவில் மழை பெய்து வருவ தால், அங்கு பெரும்பாலான இடங்கள் மழை வௌ்ளத்தால் சூழப்பட்டுள்ளன. இதனால், பொது மக்கள் வீடுகளை இழந்துள்ளதோடு குடிக்கத் தண்ணீர் கூட கிடைக் காமல் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தெற்கு ரயில்வே சார்பில், 2.8 லட்சம் லிட்டர் குடிநீர் ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதற்காக, சென்னை, தண்டை யார்பேட்டையில் இருந்து சின் டெக்ஸ் டேங்க்குகள் பொருத்தப் பட்ட ஏழு வேகன்கள் ஈரோட்டுக்கு கொண்டு சென்று, அங்கு தண்ணீர் நிரப்பி திருவனந்தபுரத்துக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. இதைத் தவிர, ரயில் குடிநீர் தயாரிக்கும் பாலாறு ஆலையில் இருந்து குடிநீர் பாட்டில்கள் அடங்கிய 15 ஆயிரம் பெட்டிகள் இரண்டு ரயில்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதைத் தவிர, கேரளாவில் உள்ள பாரா சாலா ஆலையில் இருந்து ஒரு லட்சம் குடிநீர் பாட்டில்கள் அடங்கிய 10 ஆயிரம் பெட்டிகளை அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே வௌியிட்டுள்ள செய்திக்குறிப் பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

5 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

9 hours ago

வலைஞர் பக்கம்

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்