ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படாது: நிர்வாகம் தகவல்

By செய்திப்பிரிவு

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும் என சமூக வலைதளங்களில் வௌியான தகவல் தவறானது என அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

தூத்துக்குடியில் தற்காலிகமாகத்தான் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதாகவும், ஓரிரு மாதங்களில் மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ராம்நாத் கூறியுள்ளதாக வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நேற்று தகவல் பரவியது.

இத்தகவலை ஸ்டெர்லைட் நிறுவனம் மறுத்துள்ளது. இதுகுறித்து, அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க இருப்பதாக எங்கள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கூறியதாக சமூக வலைதளங்களில் வெளியான செய்தி தவறானது. அவர் அதுபோன்று எதுவும் கூறவில்லை. தற்போதைக்கு தூத்துக்குடியில் அமைதி திரும்ப வேண்டும் என்பதற்குதான் முன்னுரிமை அளித்து வருகிறோம். ஆலையை மீண்டும் திறக்கும் எண்ணம் ஏதும் இல்லை’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

வணிகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்