மருத்துவ சேர்க்கை தரவரிசை: முதல் 10 இடத்தில் மாநில பாடத்திட்ட மாணவர்கள் எவரும் இடம்பெறவில்லை

By செய்திப்பிரிவு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடத்தில் மாநில பாடத்திட்டத்தில் படித்த ஒருவர்கூட இடம்பெறவில்லை.

அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அரசு இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான தரவரிசைப் பட்டியல் தனித்தனியாக நேற்று வெளியிடப்பட்டது. அரசு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தை சென்னை அடுத்த மேற்கு தாம்பரத்தை சேர்ந்த கே.கீர்த்தனா (நீட் மதிப்பெண் - 676) பிடித்துள்ளார்.

இரண்டாம் இடத்தை தருமபுரி மாவட்டம் மல்லப்புரத்தைச் சேர்ந்த ஆர்.அபிஷேக் (நீட் மதிப்பெண் - 656), மூன்றாம் இடத்தை சென்னை நங்கநல்லூர் தில்லை கங்கா நகரைச் சேர்ந்த ஆர்.பிரவீன் (நீட் மதிப்பெண் - 650) என்பவரும் பிடித்துள்ளனர்.

தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் 8 மாணவிகளும், 2 மாணவர்களும் இடம்பெற்றுள்ளனர். இதேபோல் தரவரிசைப் பட்டியல் முதல் 10 இடங்களை சிபிஎஸ்இ உள்ளிட்ட மத்திய பாடத்திட்டங்களில் படித்தவர்களே இடம்பெற்றுள்ளனர். மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த ஒருவர் கூட இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

35 mins ago

க்ரைம்

39 mins ago

இந்தியா

37 mins ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

சுற்றுலா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

மேலும்