தயாரிப்பு பணியில் இருந்த பிரச்சினை தீர்ந்தது; பெண் நோயாளிகள், கைதிகளுக்கு இலவச நாப்கின் விநியோகம்: பொது சுகாதாரத் துறை இயக்குநர் க.குழந்தைசாமி தகவல்

By செய்திப்பிரிவு

இலவச நாப்கின் தயாரிப்பதில் உள்ள பிரச்சினைகள் தீர்ந்ததால், பெண் நோயாளிகள், பெண் கைதிகளுக்கு இலவச நாப்கின் விநியோகம் சீராக நடந்து வருகிறது என்று பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை (டிபிஎச்) இயக்குநர் க. குழந்தைசாமி தெரிவித்தார்.

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவிகள், அரசு மனநல மருத்துவமனை, அரசு மருத்துவனையின் பிரசவ வார்டுகளில் சிகிச்சை பெறும் பெண் நோயாளிகள், சிறைகளில் இருக்கும் பெண் கைதிகளுக்கு சானிட்டரி நாப்கின்களைத் தமிழக சுகாதாரத் துறை இலவசமாக வழங்கி வருகிறது. மாணவிகளுக்கு வழங்கப்படும் நாப்கின்களைத் தயாரிக்க டெண்டர் விடப்படுகிறது. டெண்டர் எடுக்கும் நிறுவனங்கள் அவற்றை தயாரித்து கொடுக்கின்றன. பெண் நோயாளிகள், பெண் கைதிகளுக்கான நாப்கின்களை சுயஉதவிக் குழுவினரும், சிறைக் கைதிகளுமே தயாரிக்கின்றனர்.

நாப்கின் தட்டுப்பாடு

இந்த நிலையில், 2 மாதங்களுக்கு முன்பு நாப்கின் தயாரிப் பதற்கான மூலப்பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டதால், சுயஉதவிக் குழு மையங் கள் மற்றும் சிறைகளில் நாப்கின் தயாரிப்பு பணி பாதிக்கப்பட்டது. இதனால் அரசு மருத்துவமனைகள், சிறைகளுக்கு நாப்கின் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், தற்போது இந்தப் பிரச்சினை சரிசெய்யப்பட்டுள் ளது.

இதுகுறித்து பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருத்துவத் துறை (டிபிஎச்) இயக்குநர் க.குழந்தை சாமி கூறியதாவது:

சுயஉதவிக் குழுவினர் மற்றும் சிறைக் கைதிகளுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்பதற் காக நாப்கின் தயாரிக்கும் பணி கொடுக்கப்படுகிறது. அதற்கான மூலப்பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டது உண்மைதான். இதனால், அரசு மருத்துவமனைகளின் பிரசவ வார்டுகள், சிறையில் உள்ள பெண் கைதிகளுக்கு நாப்கின் வழங்குவதில் பிரச்சினை ஏற்பட்டது.

இப்போது அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டுவிட்டன. நாப்கின் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் தாராளமாக கிடைக்கிறது. தயாரிப்பு பணியும் தீவிர மாக நடக்கிறது.

ரூ.10 கோடிக்கு பணிகள்

இதனால், பெண் நோயாளிகள், பெண் கைதிகளுக்கு தட்டுப்பாடு இல்லாமல் நாப்கின் வழங்கப்படுகிறது. சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.7.5 கோடிக்கும், சிறைகளில் உள்ள கைதிகளுக்கு ரூ.2.5 கோடிக்கும் நாப்கின் தயாரிப்பதற்கான பணிகள் வழங்கப் பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

க்ரைம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

சினிமா

8 hours ago

கல்வி

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

சினிமா

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்