மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு: எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு ஜூலை 1-ல் தொடக்கம்- சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு

By சி.கண்ணன்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதைஅடுத்து மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 1-ம் தேதி தொடங்குகிறது என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

தமிழகத்தில் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி உட்பட 23 அரசு மருத்துவக் கல் லூரிகளில் 3,050 எம்பிபிஎஸ் இடங் கள் உள்ளன. இதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 476 (15 சதவீதம்) இடங்கள் போக, மாநில அரசுக்கு 2,574 இடங்கள் உள்ளன. இதேபோல 11 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,200 எம்பிபிஎஸ் இடங்களில் 689 இடங்களும் சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் உள்ள 100 எம்பிபிஎஸ் இடங்களில் 65 இடங்களும் மாநில அரசுக்கு ஒதுக்கப்படுகின்றன.

இதுதவிர சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரி, சிதம்பரம் ராஜா முத்தையா அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 180 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. அகில இந் திய ஒதுக்கீட்டுக்கு 27 (15 சதவீதம்) இடங்கள் போக, மாநில அரசுக்கு 153 இடங்கள் உள்ளன. 18 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,760 பிடிஎஸ் இடங்களில் மாநில அரசுக்கு 1,045 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

இந்த ஆண்டு அரசு, தனியார் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடி எஸ் படிப்புகளுக்கான அரசு இடங்களுக்கு நீட் தேர்வில் தகுதி பெற்று விண்ணப்பித்தவர்களில் 25,417 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இதே போல் தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பித்தவர்களில் பரிசீலனைக்கு பின்னர் 18,915 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

தரவரிசைப் பட்டியல்

இந் நிலையில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தர வரிசைப் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி, சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நேற்று நடந்தது. அரசு இடங்களுக்கு 25,417 பேருக்கும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 18,915 பேருக்கு மான தரவரிசை பட்டியலை சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வெளியிட்டார். துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின் ஜோ, மாணவர் தேர்வுக்குழு செயலாளர் ஜி.செல்வ ராஜன், ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் நாராயணபாபு உள்ளிடோர் உடன் இருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறிய தாவது:

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் கள் www.tnhealth.org மற்றும் www.tnmedicalselection.org என்ற சுகாதாரத் துறையின் இணைய தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அரசு இடங்கள், தனி யார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு மருத்துவக் கல்வி இயக்குநரகம் கலந்தாய்வு நடத்துகிறது. நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக் கான மாணவர் சேர்க்கையை மத்திய அரசின் சுகாதார சேவை களுக்கான தலைமை இயக்குநரகம் (டிஜிஎச்எஸ்) நடத்துகிறது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டு இடங்கள் கூடவும் இல்லை. குறையவும் இல்லை. 3 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி வழங்கவில்லை.

அரசுப் பள்ளி மாணவர்கள்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் படித்த 1,337 மாணவ, மாணவிகள் நீட் தேர்வில் தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் எத்தனை பேருக்கு இடம் கிடைக்கும் என்று தெரியவில்லை. போலி இருப்பிடச் சான்று தீவிரமாக கண்காணிக்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. விளையாட்டு வீரர்களுக்கு 7 எம்பிபிஎஸ், ஒரு பிடிஎஸ் இடங்களும், முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு 10 எம்பிபிஎஸ், ஒரு பிடிஎஸ் இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஜூலை 1-ம் தேதி கலந்தாய்வு தொடங்குகிறது. முதல்நாளில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடக்கும். ஜூலை 10-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும். பின்னர் இரண்டாம் கட்ட கலந்தாய்வு தொடங்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

26 mins ago

தமிழகம்

35 mins ago

விளையாட்டு

30 mins ago

கல்வி

50 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்