குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

குற்றாலத்தில் நேற்று மிதமான சாரல் மழை பெய்ததால் அருவிகளில் நீர் வரத்து அதிகரித்தது.

குற்றாலத்தில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக சாரல் காலம் களைகட்டியுள்ளது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. நேற்று மிதமான சாரல் மழை பெய்தது.

இதனால் குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவி ஆகியவற்றில் நீர்வரத்து சற்று அதிகரித்தது. நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்ட விழாவை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று உள்ளூர் விடுமுறை என்பதால், சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். நேற்று காலை 8.30 மணி வரை குண்டாறு அணைப் பகுதியில் 5 மி.மீ., ராமநதி அணை, அடவிநயினார் கோவில் அணை, செங்கோட்டையில் தலா 2 மி.மீ., பாபநாசம், சேர்வலாறில் தலா 1 மி.மீ. மழை பதிவானது.

பாபநாசம் அணையின் நீர்மட்டம் சிறிது உயர்ந்து 91.65 அடியாக இருந்தது. சேர்வலாறு அணை நீர்மட்டம் சிறிது குறைந்து 108.04 அடியாக இருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

சினிமா

20 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

37 mins ago

இந்தியா

2 hours ago

வணிகம்

2 hours ago

சினிமா

25 mins ago

உலகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஓடிடி களம்

3 hours ago

மேலும்