ஜூலை 5-ல் ஆஜராக எஸ்வி சேகருக்கு நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

பெண் பத்திரிகையாளரை அவதூறாக விமரிசித்து முகநூலில் கருத்து பதிவிட்ட வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகர் ஜூலை 5-ல் ஆஜராக வேண்டும் என்று கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

பாஜக பிரமுகருமான நடிகர் எஸ்.வி.சேகர், பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக விமர்சித்து தனது முகநூல் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். இதுதொடர்பாக இந்திய குடியரசு கட்சி (அத்வாலே) மாநில அமைப்பாளர் தலித் பாண்டியன் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 2-ல் எஸ்.வி.சேகர் மீது 7 பிரிவுகளில் கடந்த ஏப்.23-ம் தேதி வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கில், கடந்த 15-ம் தேதி மனுதாரர் பாண்டியன் மற்றும் சாட்சியான செய்தியாளர் அன்பழகன் ஆகியோரிடம் நீதிபதி விசாரணை நடத்தினார். அதன்பின் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்ட இவ்வழக்கின் விசாரணை நேற்று நடந்தது. அப்போது, எஸ்.வி.சேகர் ஜூலை 5-ல் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

9 hours ago

க்ரைம்

9 hours ago

உலகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

வேலை வாய்ப்பு

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

விளையாட்டு

12 hours ago

மேலும்