அதிமுக செயலாளர் வீட்டின் முன்பு தீக்குளித்த கடற்படை வீரர் பலி

By செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டம், அரக்கோணம் அருகே உள்ள புளியமங்கலத்தைச் சேர்ந்த ராகேஷ்(26) இந்திய கடற்படை வீரர். இவரும், திருத்தணி நகராட்சியின் முன்னாள் தலைவரும் திருத்தணி நகர அதிமுக செயலாளருமான சவுந்தரராஜனின் மகள் அஸ்வினியும்(22) காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சவுந்தரராஜன் தன் மகள் அஸ்வினிக்கு வேறு நபரை திருமணம் செய்ய நிச்சயம் செய்ய இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனையறிந்த ராகேஷ் தன் குடும்பத்தார் மற்றும் உறவினர்களுடன் கடந்த மாதம் 28-ம் தேதி மாலை சவுந்தரராஜன் வீட்டுக்கு பெண் கேட்கச் சென்றார். அப்போது, சவுந்தரராஜனுக்கும், ராகேஷுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.

இதனால், கோபமடைந்த ராகேஷ், சவுந்தரராஜனின் வீட்டின் முன்பு, தீக்குளித்தார்.

இதில், படுகாயமடைந்த ராகேஷ், அரக்கோணம் அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, பரங்கிமலை ராணுவ மருத்துவமனை ஆகியவற்றில் அடுத்தடுத்து சிகிச்சை பெற்றார். தொடர்ந்து, ராகேஷ், நேற்று முன்தினம் மும்பையில் உள்ள இந்திய கடற்படை மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், நேற்று மாலை ராகேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

53 mins ago

ஜோதிடம்

57 mins ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

7 hours ago

உலகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

வேலை வாய்ப்பு

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

கல்வி

10 hours ago

மேலும்