காவிரி விவகாரம்: நெல்லையில் பயணிகள் ரயிலை மறித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நெல்லையில் பயணிகள் ரயிலை மறித்து திமுக உள்ளிட்ட கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து, திமுகவினர் ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து சாலை மறியல், உண்ணாவிரதம், ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை) 5-வது நாளாக தமிழகம் முழுவதும் திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகளான காங்கிரஸ், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சியினர் தமிழகம் முழுவதும் ரயில் மறியல், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

நெல்லையில் குருந்துடையார்புரத்தில் ரயில்வே பாலம் அருகே நெல்லையிலிருந்து நாகர்கோவில் சென்ற பயணிகள் ரயிலை மறித்து திமுக உள்ளிட்ட கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அங்கிருந்த காவல் துறையினர் ரயில் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டக்காரர்களுக்கும் காவல் துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்பின், போராட்டக்காரர்களை கைது செய்து காவல் துறையினர் அப்புறப்படுத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

28 mins ago

ஜோதிடம்

35 mins ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

6 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

10 hours ago

வலைஞர் பக்கம்

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்