சென்னை கடற்கரை - அத்திப்பட்டு இடையே புதிய ரயில் பாதை பணி 3 மாதங்களில் நிறைவடையும்

By செய்திப்பிரிவு

சென்னை கடற்கரையில் இருந்து அத்திப்பட்டுக்கு அமைக்கப்பட்டு வரும் 3 மற்றும் 4-வது புதிய ரயில்வே பாதை அமைப்புப் பணி 3 மாதங்களில் முடியும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி மார்க்கம் அத்திப்பட்டு வரை 4-வது புதிய ரயில்வே பாதை அமைக்கும் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்தத் திட்டத்துக்கு போதிய அளவில் நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் நீட்டித்து வந்தது. இதனால் இந்த ரயில் பாதைகள் அமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

பிறகு, சில இடங்களில் ரயில்வே இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த வீடு, குடிசைகளை ரயில்வே துறையினர் அப்புறப்படுத்தினர். இதையடுத்து, கடந்த ஒராண்டாக இத்திட்டப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

3 மாதங்களில் நிறைவு

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘சென்னை கடற்கரை - அத்திப்பட்டு புதிய ரயில்பாதை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. அதன்பிறகு, கடந்த 2 ஆண்டுகளாக போதிய அளவில் நிதியும் ஒதுக்கீடு செய்து பணிகள் வேகமாக நடந்து வருக்கின்றன. இன்னும் 3 அல்லது 4 மாதங்களில் ஒட்டு மொத்த பணிகளும் நிறைவடையும் என எதிர்பார்க்கிறோம். இந்த புதிய பாதைகள் பயன்பாட்டுக்கு வரும்போது சென்னையில் இருந்து அத்திப்பட்டு வரையில் கூடுதலாக விரைவு மற்றும் மின்சார ரயில்களை இயக்க முடியும். மேலும், துறைமுகத்துக்கு சரக்கு ரயில் போக்குவரத்தும் அதிகரிக்கும்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

8 hours ago

உலகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

வேலை வாய்ப்பு

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

கல்வி

11 hours ago

மேலும்