ஜெயலலிதா சிலை தத்ரூபமாக உள்ளது: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

By செய்திப்பிரிவு

அதிமுக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா சிலை தத்ரூபமாக இருக்கிறது என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளான பிப் 24-ஆம் தேதி அன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அவரது முழு உருவச் சிலை திறப்பு விழா நடைபெற்றது. ஆனால் சிலை ஜெயலலிதா உருவம் போல் இல்லை என்று சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இந்நிலையில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஸ்ரீவில்லிபுத்தூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஜெயலலிதா சிலை தத்ரூபமாக உள்ளது. அவர் உயிரோடு இருக்கும்போது எப்படி தொண்டர்களை பார்த்து கையசைப்பாரோ அதே போல உள்ளது” என்று கூறினார்.

மேலும், “அதிமுக ஒன்றரை கோடி தொண்டர்களின் பலத்தால் ஆலமரம் போல அஸ்திவாரம் போடப்பட்டு உறுதியாக உள்ளது. இதிலிருந்து ஒரு செங்கல்லை கூட யாரும் உருவ முடியாது என்று ராஜேந்திரா பாலாஜி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

20 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

3 hours ago

வணிகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்