‘தமிழ்நாடு’ முதல் ‘தி இந்து’ வரை: திருச்சியில் ஒரு நியூஸியம்

By கல்யாணசுந்தரம்

சி

றுவயது முதலே சிலருக்கு அஞ்சல் அட்டை, அஞ்சல் தலை சேகரிப்பு, புத்தகங்கள் சேகரிப்பு என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பழக்கம் இருக்கும்.

அந்தவகையில் தனது 12 வயது முதல் நாளிதழ்கள், நூல் கள் ஆகியவற்றை சேகரிக்கத் தொடங்கி ஏறத்தாழ 60 ஆண்டுகளாக ஏராளமான இதழ்கள், நூல்களைச் சேகரித்து அதற் கென திருச்சி, சுப்பிரமணியபுரத்தில் தனது வீட்டின் மாடியில் தனியாக நூலகத்தை அமைத் துப் பராமரித்து வருகிறார் பட்டாபி ராமன்.

தனது வீட்டின் மூன்றாவது தளத்தில் வைத்துள்ள நூலகத் தில் தமிழகம், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், கனடா மற்றும் பிறநாடுகளிலிருந்து வெளியா கும் தமிழ் இதழ்கள் என ஏறத்தாழ 4 ஆயிரத்துக்கும் அதிகமான இதழ்கள் உள்ளன. இவை மட்டுமல்லாமல் 3,500-க்கும் மேற்பட்ட நிறுத்தப்பட்டுவிட்ட இதழ்கள், 2-வது வெளியீட்டைக் காணாத இதழ்கள், தொடர்ந்து வெளியாகும் இதழ்கள் என 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொகுப்புகள், நாளிதழ்கள், பருவ இதழ்களின் மலர்கள் 700, பருவ இதழ்களின் இணைப்புகள் 5 ஆயிரம், வெளிநாட்டுத் தமிழ் இதழ்களின் மலர்கள் 100, வெளிநாட்டுத் தமிழறிஞர்களின் நூல்கள் 300, இதழியல் நூல்கள் 400 என இவரது சேகரிப்புகள் ஏராளம்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் செருவாவிடுதிதான் அவரது சொந்த ஊர். பொறியியல் படிப்பை முடித்துவிட்டு, பொதுப்பணித் துறை யில் பணியாற்றி ஓய்வும் பெற்றுவிட்டார்.

அவரை அவரது பன்னாட்டுத் தமிழ் இதழ்கள் ஆய்வு நூலகத்தில் சந்தித்தோம். “12 வய தில் உறவினரின் மளிகைக் கடைக்கு எடைக்கு வரும் பழைய பேப்பர்களை வாசிக்கத் தொடங்கியபோதுதான் அவற் றை சேகரிக்க வேண்டும் என்ற சிந்தனை வந்தது. 1958-ல் தொடங்கிய எனது பணி இன்றுவரை நடக்கிறது. 1959-ல் வெளிவந்த ‘தமிழ்நாடு‘ நாளிதழ் தொடங்கி மித்ரன், குடியரசு என நீண்டு தற்போதைய ‘தி இந்து’ வரை சேகரித்துள்ளேன்.

ஏறத்தாழ 160 ஆண்டுக்கு முன்னால் வந்த நெல்லை அத்தியாச்சாதீன நற்போதகம், 110 ஆண்டு பழமையான ஞானத்தூதன், பாரதியார் கொண்டு வந்த இந்தியா, திருவிகவின் தேசபக்தன், குடியரசு, பகுத்தறிவு, லோ கோபகாரி, ஆனந்த போதினி போன்ற பல பழமையான இதழ்கள் என்னிடம் உள்ளன.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்1965-ல் பொறியாளர் படிப்பு படித்தபோது 650 இதழ்களைக் கொண்டு பத்திரிகை காட்சி நடத்தினேன். அதன்பிறகு பல ஊர்களில் கண்காட்சியை நடத்தியிருக்கிறேன். இலங்கை, சிங்கப்பூர், கோலாலம்பூர், பினாங்கு என எனது பயணம் தொடர்ந்தது.

இந்த நூலகத்தை இப்போது பல ஆய்வு மாணவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். மொத்தம் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் இதழ்கள், நூல்கள் உள்ளன. இதுதவிர 5 தொகுப்பு நூல்களையும் வெளியிட்டுள்ளேன். தேவையானவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்” என்றார்.

பழங்கால பொக்கிஷங்களை பாதுகாத்து காட்சிக்கு வைக்கும் இடம் மியூசியம் என்றால் பட்டாபிராமன் நடத்துவது நியூஸியம் என்றுதான் சொல்ல வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

40 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

16 mins ago

தமிழகம்

1 hour ago

உலகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வலைஞர் பக்கம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

உலகம்

3 hours ago

மேலும்