அரசு பஸ் தொழிலாளர்கள் ஸ்டிரைக் காரணமாக தண்டவாள பராமரிப்பு பணிகள் தற்காலிகமாக ஒத்திவைப்பு: 670 மின்சார ரயில்களும் ஓடும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு

By செய்திப்பிரிவு

அரசு பஸ் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் தொடர்வதால், தண்டவாள பராமரிப்புப் பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும், சென்னையில் வழக்கம்போல் 670 மின்சார ரயில்களும் ஓடும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

போக்குவரத்து பஸ் தொழிலாளர்களின் போராட்டத்தால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பஸ் சேவை முடங்கியுள்ளது. சென்ட்ரல் மூர்மார்க்கெட்டில் இருந்து இயக்கப்படும் அனைத்து மின்சார சேவையிலும், கடற்கரை - தாம்பரம், செங்கல்பட்டு சேவையிலும், பறக்கும் ரயில் சேவையிலும் நள்ளிரவு வரை மக்கள் பயணம் செய்து வருகின்றனர். இதனால், மின்சார ரயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று விடுமுறை நாளாக இருந்த போதிலும், மின்சார ரயில்களில் மக்கள் படிக்கட்டில் தொங்கியபடி பய ணம் செய்தனர்.

பயணிகள் வசதியை கருத்தில்கொண்டு ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பல்வேறு பராமரிப்புப் பணிகள் திடீரென ரத்து செய்யப்பட்டன. குறிப்பாக, சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே ரத்து செய்யப்பட்ட பறக்கும் ரயில்சேவை மீண்டும் வழக்கம்போல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து ரயில்களும் இயக்கம்

வழக்கமான நாட்களைக் காட்டிலும், ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் 602 மின்சார ரயில்கள் இயக்கப்படும். தற்போது, போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டம் தொடர்வதால், வழக்கமான அலுவலக நாட்களில் இயக்குவது போல், 670 மின்சார ரயில்களும் இன்று இயக்கப்படும். கடற்கரை – தாம்பரம் இடையே 10 நிமிடங்களுக்கு ஒரு மின்சார ரயில், கடற்கரை – வேளச்சேரி இடையே 15 நிமிடங்களுக்கு ஒரு மின்சார ரயிலும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

13.10 லட்சம் பேர் பயணம்

பஸ் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கையும், வருவாயும் அதிகரித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

9 hours ago

வலைஞர் பக்கம்

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்