11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 6-ல் ஜாக்டோ - ஜியோ போராட்டம்

By செய்திப்பிரிவு

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்ககைளை வலியுறுத்தி ஜனவரி 6-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் தொடர் முழக்க போராட்டம் நடத்த ஜாக்டோ-ஜியோ முடிவு செய்துள்ளது.

தமிழ்நாடு அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் சென்னையில் உள்ள தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சங்க அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா. தாஸ், மு.அன்பரசு ஆகியோர் தலைமை தாங்கினர்.

இந்த கூட்டத்தில், ஜனவரி 6-ம் தேதி அன்று பங்களிப்பு ஓய்வூதிய திட்ட ரத்து அறிக்கையை வெளியிடுவது, பொங்கல் போனஸ் உள்பட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரில் காலை மணி 10 முதல் 1 மணி வரை தொடர் முழக்க போராட்டம் நடத்துவது. ஜனவரி 9, 10-ம் தேதிகளில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள், சட்டமன்ற கட்சி தலைவர்கள் மற்றும் அமைச்சர்களை சந்திப்பது, பிப்ரவரி 4-ம் தேதி சென்னையில் புதிய பென்சன் திட்ட ஒழிப்பு கருத்தரங்கம் நடத்துவது, ஜனவரியில் மதுரையில் நடைபெற உள்ள உயர்மட்டக்குழு கூட்டத்தில் தொடர் மறியல் போராட்டத் தேதியை அறிவிப்பது என்பன உள்பட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

5 mins ago

இந்தியா

13 mins ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்