ஆர்.கே.நகரில் 2.28 லட்சம் வாக்காளர்கள்

By செய்திப்பிரிவு

இடைத்தேர்தல் நடக்கவுள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் 2 லட்சத்து 28 ஆயிரத்து 234 வாக்காளர்கள் உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடந்தன. சென்னையில் மட்டும் நவம்பர் 30-ம் தேதி வரை பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம் தொடர்பாக மனு அளிக்க அவகாசம் அளிக்கப்பட்டது.

இதற்கிடையே, ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால், நவம்பர் 28-ம் தேதி வரை பெறப்பட்ட மனுக்கள் கள ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இறுதியாக, தற்போது 2 லட்சத்து 28 ஆயிரத்து 234 வாக்காளர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பு 2 லட்சத்து 26 ஆயிரத்து 714 பேர் இருந்தனர். தற்போது ஆயிரத்து 520 வாக்காளர்கள் புதிதாக இணைந்துள்ளனர். இதில், ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 903 ஆண்கள், ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 232 பெண்கள், 99 மூன்றாம் பாலினத்தவர் உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 701 பேரும், பெண் வாக்காளர்கள் 819 பேரும் அதிகரித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

14 mins ago

கருத்துப் பேழை

22 mins ago

இந்தியா

30 mins ago

இந்தியா

39 mins ago

உலகம்

50 mins ago

இந்தியா

59 mins ago

இந்தியா

53 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்