குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக வலுப்பெறுமா?- தமிழ்நாடு வெதர்மேன் பதிவு

By செய்திப்பிரிவு

தற்போது வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக மாற வாய்ப்புள்ளது, அது செல்லும் திசை பற்றி, பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும் என்று தமிழ்நாடு வெதர்மேன் முகநூலில் பதிவுசெய்துள்ளார்.

வடகிழக்குப் பருவமழை குறித்த தி தமிழ்நாடு வெதர்மேன் முகநூல் பதிவு:

"தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும், டெல்டா பகுதிகளில் இன்றும், நாளையும் மழை இருக்கும். தென் மேற்கு வங்கக்கடலில் உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, கன்னியாகுமரி கடற்கரையை நோக்கி இன்று அல்லது நாளை நகர்ந்துவிடும்.

இதன் காரணமாக, டெல்டா மாவட்டங்கள், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.

நமக்கு அதிகமான மழை தேவைப்படுகிறது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் மெல்ல உயர்ந்து வருகிறது. வரும் நாட்களில் தென் தமிழகத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டமும் இந்த மழையால் படிப்படியாக உயரக்கூடும்.

புயல் வருகிறதா?

அடுத்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, புயலாக மாற வாய்ப்புள்ளது. இது எங்கே நகரும் என்பதை இப்போது கூற முடியாது. இந்தப் புயல் தெற்கு அந்தமானில் இருந்து வடமேற்காக கூட நகரலாம். ஆகையால், அந்தப் புயல் எந்த திசை நோக்கி நகர்கிறது என்பதை அறிய சிறிது காத்திருக்க வேண்டும். பார்க்கலாம்"

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

25 mins ago

க்ரைம்

29 mins ago

இந்தியா

27 mins ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

சுற்றுலா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

மேலும்