பைனான்சியர் போத்ரா மகன் மீதான குண்டர் சட்டம் ரத்து: உயர் நீதிமன்றம் புது உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை போத்ரா மகன் குண்டர் சட்டத்தை ரத்து செய்த உயர் நீதிமன்றம், சிவில் வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களை சர்வ சாதாரணமாக குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கந்துவட்டி வழக்கில் கைது செய்யப்பட்ட முகுந்த் சந்த் போத்ரா, அவரது மகன் ககன் போத்ரா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் உத்தரவு பிறப்பித்த அடிப்படையில் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதில் முகுந்த் சந்த் போத்ரா மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யப்பட்டது. ககன் போத்ரா மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி அவரது சகோதரி கரிஷ்மா போத்ரா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ராஜீவ் சக்தேர், சதீஸ் குமார் அமர்வு, ககன் போத்ராவை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை குடும்பத்தினருக்குத் தெரிவிக்கவில்லை என கூறி அவர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது.

சிவில் பரிவர்த்தனைகள் தொடர்பான வழக்கில் குண்டர் சட்டத்தை சர்வ சாதாரணமாக பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்ட அமர்வு, ககன் போத்ரா அதிக வட்டி வசூல் செய்தார் என்பதற்காக அவரை குண்டர் என கருதக்கூடாது எனவும், குண்டர் தடுப்பு சட்டத்தை தேவையில்லாத வழக்குகளில் பயன்படுத்துவதை தமிழக அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவின் நகலை அனைத்து காவல் ஆணையர்கள், அதிகாரிகளுக்கும், சட்டம் ஒழுங்கு டிஜிபிக்கும் அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்