சித்த மருத்துவத்தில் நிலவேம்பு குடிநீர் மூலம் டெங்கு காய்ச்சலை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும்: பேராசிரியர் மருத்துவர் வெ.பானுமதி தகவல்

By செய்திப்பிரிவு

நிலவேம்பு குடிநீர் மூலம் டெங்கு காய்ச்சலை முற்றிலும் கட்டுப்படுத்த முடியும் என தேசிய சித்த மருத்துவ நிறுவன இயக்குநர் பேராசிரியர் மருத்துவர் வெ.பானுமதி தெரிவித்துள்ளார்.

டெங்கு ஒரு வைரஸ் நோய். இதற்கு சித்த மருத்துவத்தில் தீர்வு உண்டு. நிலவேம்பு குடிநீர் மூலம் இதை குணப்படுத்த முடியும். தமிழக அரசு சார்பில் மக்களுக்கு இலவச மாக இது விநியோகிக்கப்படுகிறது. அதே சமயம், மத்திய அரசு நிறுவன மான தேசிய சித்த மருத்துவ நிறுவன மும் டெங்கு காய்ச்சலுக்கு என சிறப்பு முகாம்களை அமைத்து சிகிச்சை அளித்து வருகிறது. காய்ச்சல் இருந்தால், தினமும் 2 முறை கொடுக்க வேண்டும். காய்ச்சல் இல்லையெனில், டெங்கு பரவாமல் தடுக்க தினமும் ஒருமுறை என்று 5 நாட்களுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். இதை சரியாகப் பின்பற்றினால், டெங்கு காய்ச்சல் பரவாது.

எந்த பாதிப்பும் வராது

இந்த நிலையில் நிலவேம்பு குடிநீர் குறித்து தவறான வதந்தி பரவி வருகிறது. அதில் உள்ள 9 மூலிகையில் ஒன்று மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் என்ற தகவல் மருத்துவர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

பொதுமக்களிடம் நிலவேம்பு குறித்து தவறான தகவலைப் பரப்ப வேண்டாம். அதை குடிப்பதால் எந்த பாதிப்பும் வராது என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவன இயக்குநர் பேராசிரியர் மருத்துவர் வெ.பானுமதி கூறியதாவது: நிலவேம்பு, வெட்டி வேர், விளாமிச்ச வேர், சந்தனக் கட்டை, பேய் புடல், கோரைக் கிழங்கு, சுக்கு, மிளகு, பப்படம் புல் போன்ற மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டது நிலவேம்பு குடிநீர்.

டெங்கு காய்ச்சல் வந்தவர்கள் மட்டுமின்றி, சாதாரண காய்ச்சல் வந்தவர்களும் நிலவேம்பு குடிநீர் அருந்தலாம். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, ரத்த தட்டு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் பக்க விளைவு கள் ஏதும் இல்லை. மத்திய, மாநில அரசுகள் சிறந்த மருந்து என ஒப்புதல் அளித்துள்ளது. நிலவேம்பு குடிநீர் குறித்து சித்த பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளது.

பாரம்பரிய மருத்துவ முறை

தேசிய சித்த நிறுவனம் தொடங்கப்பட்ட நாளில் இருந்தே டெங்கு, சிக்கன் குனியா மற்றும் நாள்பட்ட அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சையில் குணம் அடைந்தவர்கள் மூலம் பல ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இங்கு வந்து பயன்பெற்றுச் செல்கின்றனர்.

சித்த மருத்துவத்தில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான நோய்களை குணப்படுத்த முடியும். சித்த மருத்துவத்தில் நோய்களுக்கு தீர்வு உண்டு. சிலர் வதந்திகளை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். எனவே மக்கள் வதந்திகளை நம்பாமல் நமது பாரம்பரிய மருத்துவ முறையைப் பின்பற்றினால் நோய் நொடியின்றி வாழலாம் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

50 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

7 hours ago

வலைஞர் பக்கம்

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்