லாபம் தரும் முதலீட்டுக்கான ஒதுக்கீடு உளைச்சல் இல்லாத முதலீடுகளை தேர்ந்தெடுப்பது எப்படி? - எஸ்.லோகநாதன், இயக்குநர், இன்வெஸ்ட்ஸோன் 24X7 பைனான்சியல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்.

By செய்திப்பிரிவு

கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் பங்குச் சந்தையில் கடுமையான சரிவு காணப்பட்டது. 10 மாதங்களுக்குப் பிறகு பங்குச் சந்தை கடுமையான நஷ்டத்திலிருந்து மட்டும் மீளவில்லை, அத்துடன் புதிய உச்சத்தையும் எட்டியது. இருந்தபோதிலும் முதலீட்டாளர்களின் மனநிலை இன்னமும் ஊசலாட்டத்தில்தான் தொடர்கிறது. சரியான பங்குகளில் முதலீடுகளை மேற்கொள்வதில் கூட இரட்டை மனநிலையே நீடிக்கிறது. கடந்த சில மாதங்களாக பங்குச் சந்தையில் ஏற்றமிகு போக்கை கண்டு வந்த முதலீட்டாளர்கள் தற்போது மீண்டும் இறக்கத்தின் போக்கை எதிர்கொள்கின்றனர்.

இந்த சமயத்தில்தான் அஸெட் அலோகேஷன் என்ற உத்தி உதவியாக இருக்கிறது. தற்போது எதில் முதலீடு செய்வது லாபகரமானதாக இருக்கும் என்பதைத் திட்டமிட வேண்டியது அவசியம். சரியான முதலீடுகளைத் தேர்வு செய்துவிட்டால் அத்தகைய முதலீட்டுத் திட்டங்கள் முதலீட்டாளருக்கு நல்ல வருமானத்தையும் நிம்மதியான உறக்கத்தையும் நிச்சயம் அளிக்கும். பிற நிதி முதலீட்டுத் திட்டங்கள் எத்தகைய பலனை அளிக்கின்றன என்பதை அறிந்து அதற்கேற்ப முதலீடுகளை மேற்கொண்டாலே போதுமானது. இவ்விதம் சரியான முதலீடுகளைத் தேர்வு செய்தால் உங்களது முதலீட்டு பயணமானது சந்தையில் ஏற்படும் ஏற்ற, இறக்கங்களை சமாளித்து உரிய பலனை அளிப்பதாக அமைந்துவிடும்.

அனைத்து சூழலையும் தாக்குப்பிடிக்கும் அணுகுமுறை நீண்ட கால முதலீட்டுத் திட்டங்களை மேற்கொள்ளும்போது, ஏற்ற, இறக்கங்களைச் சமாளித்து நல்ல வருமானத்தை தரும் வகையில் பல்வேறு முதலீட்டுத் திட்டங்களை கலந்து முதலீடு செய்வதுதான் சிறந்த வழி. அஸெட் அலோகேஷனின் அடிப்படை அம்சம் இதுதான். முந்தைய சந்தை நிலவரங்கள் அளிக்கும் படிப்பினையும் இதுதான், அதாவது நீண்ட காலத்தில் பலனளிக்கும் வகையில் முதலீடுகளைத் திட்டமிட்டு மேற்கொள்வதாகும். பல்வேறு முதலீட்டுத் திட்டங்களில் பிரித்து முதலீடு செய்வதை தொடர்ந்து வழக்கமாக வைத்திருப்பது அனைத்து விதமான சூழலையும் தாக்குப்பிடிக்க உதவுவதோடு, தொடர்ந்து நிலையான வருமானம் அளிப்பதாகவும் இருக்கும்.

இதனால் பங்குச் சந்தையில் காளையின் ஆதிக்கம் இருந்தாலும், கரடியின் தாக்கம் இருந்தாலும் உங்களது முதலீடு எப்போதும் லாபகரமானதாக இருக்கும். ஏற்ற, இறக்க சூழலை குறைப்பது எப்படிஅஸெட் அலொகேஷனின் பொதுவான இலக்கு முதலீடுகளின் மீதான வருமானத்தில் உண்டாகும் நஷ்டத்தை குறைப்பதுதான். பொதுவாகவே ஒரே நேரத்தில் ஒரே சூழலில் எல்லாவிதமான முதலீடுகளும் ஒரே மாதிரியான போக்குக்கு உள்ளாவதில்லை. அவை ஒவ்வொன்றும்ஒவ்வொரு விதமாக செயலாற்றுகின்றன. அஸெட் அலோகேஷன் இதை அடிப்படையாக வைத்தே தனது முதலீடுகளைத் திட்டமிடுகிறது.

பங்குச்சந்தையின் போக்கிற்கேற்ப அதற்குரிய சூழலை அதே நேரத்தில் உருவாக்குவதாகும். பங்குகள், கடன் பத்திரங்கள் இரண்டும் வெவ்வேறு சூழல்களில் வெவ்வேறு விதமான செயல்பாடுகளை வெளிப்படுத்துகின்றன. பங்கு முதலீடுகள் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்போது நன்றாக செயலாற்றுகின்றன. அதேசமயம் கடன் பத்திரங்கள் பொருளாதாரம் மோசமான நிலையில் இருக்கும் போது சிறப்பாக செயல்படுகின்றன.

உங்களது ஒரு முதலீட்டுத் திட்டம் குறைந்த பலனை அளிப்பதாக இருந்தாலும் மற்றொரு முதலீட்டுத் திட்டம் சிறந்த பலனை அளித்து உங்களது வருமானம் தொடர்ந்து சீராக இருக்க உதவும். இதன்மூலம் உங்களுடைய மொத்த போர்ட்ஃபோலியோவில் உண்டாகும் நஷ்டம் வெகுவாகக் குறைக்கப்படும். இதுபோன்ற அணுகுமுறையில் உங்கள் முதலீடுகளை மேற்கொள்ளும் போது உங்களது முதலீட்டுப் பயணம் சிறப்பாக இருக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

இந்தியா

23 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

45 mins ago

சினிமா

52 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

ஓடிடி களம்

2 hours ago

கல்வி

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்